பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

125

தானும் என்றது யானையை. காலாள், குதிரை, தேர் ஆகிய போர்களினும் யானைப்போர், வீறுடையதாம். யானை காலால் உழக்கியும், கையால் பற்றியும், உடலால் தேய்த்தும் களத்தைக் கலக்கும் ஆகலின் என்க. அதனால் அன்றே,

66

ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவ னுக்கு வகுப்பது பரணி'

என்னும் பாட்டுடைப் புகழும் சூட்டப்பெற்றனர்.! ஆயினும் வ்விணையிலா வீரன் அதனை நோக்கினான் அல்லன்! வலிதரு நீள் தடக்கை ஆயினும் அஃது ஒரு விலங்கே அல்லவா!

விலங்கு, நிமிர்ந்து நடக்காது குறுக்கிட்டு நடப்பது. மாந்தனோ நிமிர்ந்து நடப்பவன். அவன் நிமிர்ந்து நடவாத விலங்கை வெற்றி கொள்வது பாராட்டும் வெற்றிதானோ? என எண்ணினான். அதனால், 'தானும் விலங்கால்' என்றான்; அம் மட்டோ! ஐயறிவுடைய விலங்கை ஆறறிவுடைய ஆடவன் வேறல் அழகும் ஆமோ? என எண்ணினான்; நாணுத்தரும் வீரமாக அவனுக்குத் தோன்றியது.

ஒரு வேலைத் தூக்கிய தன் கைகளை நினைந்தான். இரு கைகளால் எடுத்து எறிந்து ஏவி எதைத் தாக்குவது? ஒரு கையுடைய யானையை அன்றோ என எண்ணினான். அதனால் ஒரு கைத்தால்' என அமைந்து ஆழ்ந்து எண்ணினான். வெற்றி பெறுவதில் ஐயுறவில்லை. ஆனால் பெருமிதமான வெற்றியாகுமா? என முடிவுசெய்து, "வெல்கை நன்றென்னும் நலம் காணேன்; நாணுத் தரும்" என மொழிந்து வேலோச்சுதலை விடுத்தான்.

66

“கருமத்தால் நாணுதல்” தானே நாணுதல்.

திருக். 1011

களிற்றுப்போர் வெற்றி கவின் மிக்கதாக இருந்தும், அதனை வேறலும் தனக்குப் பெருமை தருவதன்று; சிறுமையே தரும் என்று வீரன் கூறினன் ஆகலின் 'படைச் செருக்கு' என்பது ஆயிற்று. பிறரிடைக் காணாப் பெருநிலையன்றோ பெருமிதம் என்பது.

66

'தானால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால் யானை எறிதல் இளிவரவால் - யானை

ஒருகை யுடைய தெறிவலோ யானும்

இருகை சுமந்துவாழ் வேன்’

-தொல். புறத். 5 நச். மேற்.

(24)

என்பது இவண் ஒப்புநோக்கி இன்புறத்தக்கது.