பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இளங்குமரனார் தமிழ்வளம்

12

அவன் குறிப்பறிந்து கடனாற்றுதல் வல்ல மாவாகலின் ‘ஈதவன் மாவே' என்றான். அவன் வந்த விரைவுக்குக் காரணம் காட்டு வானாகக்,

66

'கறுவுகொள் நெஞ்சம் கதுவவந் தனனே'

என்றான். கொல்லுதற்குக் கறுவிய நெஞ்சம் கறுவுகொள் நெஞ்சம்; இதனைச்,

“செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சம்”

என்பார் நக்கீரனார். (திருமுருகு. 99 -100)

குறைநாள் மறவீர், குறுகல் ஓம்புமின்' என இயைக்க. குறுகல் ஓம்புமின் போகாதேயுங்கள். கறுவினைக் கூறிக் குறுகல் ஓம்புமின் என்றான், அனைவர் நோக்கையும் தன்பால் ஈர்க்கும் சொல்வன்மையால். குறுகின் வாழ்நாள் இன்னே முடிதல் உறுதியாகலின் 'குறைநாள் மறவீர்' என்று விளித்தான்.

வருபவன் கொண்ட கறுவினை விளக்குவானாக, “நேற்றைப் பகலில் கூட்டமாக வந்த பெருவலி வாய்ந்த பருத்துச் செருக்கிய யானைகள் துடிக்க அழிபாடு செய்து, அக்களத்திலேயே தன் ஆருயிரை விட்டோன் ஆகிய வீரனின் தம்பி” என்பதை,

"நெருநல் எல்லி நிரைவரு கடுந்திறல் பருமத யானை பதைக்க நூறி

அடுகளத் தொழிந்தோன் தம்பி”

என்றான். இவனும் தன்னுயிர் போற்றி அமையானாய்க் களம்புக்கு எதிர்த்தோரை எல்லாம் கலக்கி அழிப்பான் என்று உரைத் தானாம்.

-

நூறி- அழித்து (பதிற். 69,88) நூறு படச் செய்தலும் துகளாக்குதலும் ஆம். நீறு என்பது நீற்றப்படுவது. நூறு என்பது நொறுக்கப் படுவது. "கோட்டுநூறு' திருநீறு என்பவை அறிக. தெரியல் - மாலை. தெரிந்தெடுத்த மலர்களால் கட்டப்பெற்றது ஆகலின்; காரணப்பொருட்டு.

அச்சமே கீழ்களது ஆசாரம்' ஆகலின் இம் மேலோன் ‘அச்சம் அறியான்' எனப்பெற்றான். அழிவு நேர்தல் உறுதிப் பாடு ஆகலின், ‘ஆரணங்கினன்' என எதிர்காலத்தை இறந்த காலமாகக் குறித்தான்.

(27)