பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

“பக்கரை விசித்ரமணி பொற்கலணை இட்ட நடை'

என்பார் அருணகிரியார்.

-

141

-

“படர்தருதல், படர்தல்; புரவிப் பண்பு பாராட்டுதல் சூதிரையின் போர்ப் பண்புகளைப் புகழ்ந்து பாராட்டுதல். எல்லிடைப் படர் தந்தோன் இரவுப்பொழுது ஆயிற்று. ஆகலின் போர் ஒழிந்து இவண்வந்து தங்கியோன் என்றான் வேந்தன் ஏறி இவர்ந்த யானையை வீழ்த்துதலே குறியாகக் கொண்டனன் ஆகலின், ‘வேந்தூர் யானைக்கு அல்லது ஏந்துவன் போலான்' என்றான். இந் நூலுடையார் இதனை,

“ஒட்டிய, தானை முழுதுடன் விடுத்துநம்

யானை காமின் அவன் பிறிதெறி யலனே'

என்று மேலே கூறுவதையும் (31)

66

கறையடி யானைக் கல்லது உறைகழிப் பழியா வேலோன்”

என்றும்,

66

“சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்

வேந்தூர் யானை ஏந்துமுகத் ததுவே”

என்றும் புறப்பாடல்கள் கூறுவதையும் (323, 308) காண்க அன்றியும் இத் தகடூர் யாத்திரைப் பாட்டுடன்,

“பலமென் றிகழ்தல் ஓம்புமின்; உதுக்காண்

நிலனளப் பன்ன நில்லாக் குறுநெறி

வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி

எல்லிடைப் படர்தந் தோனே கல்லென

வேந்தூர் யானைக் கல்லது

ஏந்துவன் போலான்தன் இலங்கிலை வேலே'

என்னும் ஆவூர் மூலங்கிழார் பாடிய புறப்பாட்டுப் பகுதி (301) ஒப்பிட்டு நோக்கி உவகை கூரத்தக்கதாம்.

வேலின் குத்துவாய்ப்புறம் ஆல், அரசு, மா முதலிய இலை வடிவில் செய்யப் பெறுவது ஆகலானும், ஒளியுடையது ஆகலானும் இலங்கிலை வேல் என்றான். களத்துச் சென்று பயி லாமையால் ஒளியுடைய தாயிற்றன்று; கூர்மைப் படுத்துதற்குக் களத்திடைப் பட்ட களிற்றின் தந்தத்தைத் தீட்டு பலகையாகக்