பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம்

12

இவர்ந்தோன், உறுதியாக நினைத்தாலும் நெஞ்சம் நடுங்கப் பண்ணும் ஒப்பற்ற வேலுடையனே காண். அவன், ஆழ்ந்த நீர்க் கயத்தில் கெண்டைமீனைக் குத்துதற்குப் பார்க்கும் நீனிறச் சிறிய சிரல்போல நம் பூட்டப் பெற்ற நல்ல யானைத் தொகுதிகளை அளந்து பார்க்கின்றனன். ஆகலின் களிற்றுக்கணத்தை ஒருங்கு எறிதல் உறுதி காண் என்றவாறு.

இ-து:- காரிமேலோன், களிறு அளக்கும்; அவை அழிந்துபடல் உறுதி என்பது சொல்லியது.

(வி - ரை) காரிமேலோனாய மறவன்குடி நீண்ட நெடும் சால்பும் பழைமையும் அமைந்ததாகலின் “நிலைமை நெடுந் திணை” என்றார். திணையாவது குடி. விழுத்திணை (புறம். 24, 27, 159), விளங்குதிணை. (புறம். 373), மூதில் (புறம். 19), பழங்குடி (திருக். 955), தொல்குடி (புறம். 202) என்பன வெல்லாம் அது.

கணவனொடும் ஊடிச் சிந்திய புதுப்பூண் அன்ன வனப் பமைந்த புள்ளிகளையுடைய காரிக் குதிரை என்றார். புள்ளிகளுக்கு அணிகலங்கள் உவமையாம். பரக்கச் சிதறிக் கிடத்தலாலும், ஒன்று போல் ஒன்று அமையாத் தன்மையாலும், கண்ணைக் கவரும் கவின் உடைமையாலும் அணிகள் புள்ளியொடு பொருந்துவனவாம்.

ஊடல் மிகுதலால் அணிகளைக் கழற்றி எறிதல் மகளிர் இயலாதல் இராமாயணம் முதலிய பின்னூல்களில் பெருவர விற்றான செய்தியாம். அவ்வணிகலங்கள் தெருவிற் பரவிக் கிடத்தலால் காரான் முதலியவை காற்குளம்பிடைப் பட்டுத் துன்புறல் கூடாவே என ஒதுங்கிச் செல்லுமாற்றையும் கற்பனை நயஞ்செறியக் கவிபுனைதலும் வழக்காயிற்று.

66

“நல்லோள், ஊடி, பூண் சிந்தியன்ன புள்ளி”

என இயைக்க; ‘ஏறி, காரி மேலோன்' எனவும் இயைக்க.

சிந்தியன்ன என்பது சிந்தினாற்போன்ற என்னும் பொருட்டு. இட்டாற்போன்ற, இட்டு வைத்தாற் போன்ற, மேலிட்டு வைத்தாற்போன்ற என்னும் வழக்கு உண்மையும் அறிக. அசோகின் தளிரை அரக்கு ஊட்டினாற் போன்றது என்பதை.

66

“ஊட்டி அன்ன ஒண்தளிர்ச் செயலை”