பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

பலவிகற்பப் பஃறொடை வெண்பா

37. அடுதிறல் முன்பினன் ஆற்ற முருக்கிப்

படுதலை பாறண்ண நூறி - வடியிலைவேல் வீசிப் பெயர்பவன் ஊர்ந்தமாத் தீதின்றி

நாண்மகிழ் தூங்கும் துடியன் துடிகொட்டும் பாணியிற் கொட்டும் குளம்பு.

161

புறத். 1382

பருந்

(இ-ள்) எதிரிட்டாரைக் கொல்லும் குறிப்புடையவன் பகைவரை அறத் தொலைத்துப்பட்ட தலைகளைப் துண்ணுமாறு சிதைத்துக் கூரிய இலைவடிவில் செய்யப்பெற்ற வேலை வெற்றிக்களிப்பால் வீசிக்கொண்டு திரும்புபவன், ஊர்ந்துவரும் குதிரை நடைக்குற்றம் சிறிதும் இல்லாமல், நாட் காலையில் மதுப்பருகித் திளைக்கும் துடியன், தன் துடியைக் கொட்டும் தாளத்திற்குத் தகத் தன் குடம்பொலிபடத் தாளமிடும் என்றவாறு.

இ-து:- வெற்றிக் களிப்பால் மீள்பவன் ஏறிய குதிரையும் வெற்றிக்களியால் துடியொலி ஒப்பத் தாளமிட்டு நடைபோடும் என்பது சொல்லியது.

-

(வி-ரை) முன்பு வீரம்; குறிக்கோள். ஆற்றமுருக்குதல் அறத்தொலைத்தல்; எவ்வளவு இயலுமோ அவ்வளவும் செய்து முடித்தல். படுதலை பட்டு வீழ்ந்த தலை. இனிப் பறந்தலை என்பது போலக் களம் என்பதைச் சுட்டி நின்றதுமாம்.

பாறு

-

-

-

பருந்து. பாறு களம்விட்டு அகலாது உறைதலைப் 'பாறிறை கொண்ட பறந்தலை" என்றார் புறத்தினும் (360) நூறுதல் . வெட்டுதல். இவண் சிதைய வெட்டுதல் குறித்தது, “அருஞ்சமம் ததைய நூறி” என்பதுபோல் (புறம். 93) என்க,

-

வெற்றி பெற்றோன் வேலை அதரி திரித்து வருதலும் வாளை வீசி எறிந்து ஆடுதலும் பிறவும் வழக்காறாம். இது நூழில் என்னும் புறத்துறையைச் சார்ந்ததாம். இதற்கு,

66

‘கழல் வேந்தன் படைவிலங்கி

அழல் வேல்திரித் தாட்டமர்ந்தன்று”

என்று இலக்கணமும்,

66

"ஆடல் அமர்ந்தான் அமர்வெய்யோன் வீழ்குடம் சூடல் மலைந்த சுழல்கட்பேய் - மீடன்