பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ்வளம்

12

மறந்தவேல் ஞாட்பின் மலைந்தவர் மார்பம்

திறந்தவேல் கையில் திரித்து”

என்று எடுத்துக் காட்டும் கூறி விளக்கும் புறப்பொருள் வெண்பா மாலை (141)

குதிரை குளம்பு கொட்டுதலைத் துடிகொட்டுதலுடன் இணைத்தது போலவே, ஆன் தாவுதலைத் தெய்வம் ஏறியவள் தாவுதலுடன் ஒரு புறப்பாட்டு இணைத்துக் கூறும் (259).

66

முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத் தாவுபு தெறிக்கும் ஆன்”

என்பது அது. இவர் கூறியாங்கே “பாணி நடைப்புரவி” என்றார். வெண்பாமாலை யுடையார் (112).

நாள்மகிழ் தூங்கும் - நாட்காலையில் மதுவுண்டு மகிழும் நாட்காலை மது பெருமகிழ்வும் கடுப்பும் ஊட்டும் என்பதை, “நாட்கள் உண்டு நாள்மகிழ் மகிழின்”

என்பதனாலும் (புறம். 123),

66

'துளங்கு, தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல் இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவீர்"

என்பதனாலும் (மலைபடு 463-4) புலப்படும்.

17. மூதில் மறம் – 1

(37)

பழைமையான வீரர்குடியில் பிறந்த ஆடவர்க்கே அன்றி அக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் வீரமுண்டாதலைச் சிறப்பித்துக் கூறுவது.

66

'அடல்வேல் ஆடவர்க் கன்றியும் அவ்வில்

மடவரல் மகளிர்க்கு மறமிகுத் தன்று

என இதன் இலக்கணமும்,

66

'வந்த படைநோனான் வாயில் முலைபறித்து வெந்திறல் எஃக மிறைக்கொளீஇ-முந்தை முதல்வர்கற் றான்காட்டி மூதின் மடவாள் புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு"