பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என

தகடூர் யாத்திரை மூலமும் உரையும்

163

இதற்கு எடுத்துக்காட்டும் கூறுகிறது புறப்பொருள்

வெண்பாமாலை (175).

நேரிசை வெண்பா

38. தருமமும் ஈதேயாம்; தானமும் ஈதேயாம் கருமமும் காணுங்கால் ஈதாம் - செருமுனையிற் கோள்வாய் மறவர் தலைதுமிய என்மகன் வாள்வாய் முயங்கப் பெறின்.

புறத். 1404.

-ள்) போர்க்களத்தின்கண் கொள்கை நலம் வாய்ந்து வந்த மறவர்தம் தலைகள் துண்டம்பட, என்மகன் அவர்கள் வாள் வாய்ப்பட்டுத் தழுவிக்கிடக்கப் பெறுவனாயின் என் குடிக்கு அறமாவதும் ஈதொன்றேயாம்; கொடையாவதும் ஈதொன்றேயாம்; கடப்பாடாவது, ஆராயுங்கால் ஈதொன்றே யாம் என்றவாறு.

இ-து :- மறக்குடி மைந்தர் மறக்களம் புக்குப் புண்பட்டு இறத்தலே தருமம், தானம், எல்லாம் என்பது சொல்லியது.

(வி-ரை) மூதின் மகள் தன் மைந்தன் மறமாண்புகளை ஒவ்வொன்றாக உணர்ந்து, உன்னிப் பெருமிதப்பட்டமையால் மும்முறை 'ஈதேயாம்' என்றாள். அவன் பெருமையைத் தன் குடிப்பெருமையாக்கிக் குடிக்குத் தருமமும் ஈதேயாம் என்பன போலக் கொள்க. இது மறக்குடி மகள் கூற்று.

து

வறிதே களத்தில் வாள் வாய்ப்பட்டான் என்பது குடிப் பெருமை அன்றாகலின், "செருமுனையில் கோள்வாய் மறவர் தலைதுமிய” என்றாள். போர்க்களத்தில் புண்படுதல் என்றும், எண்மையவாம் மறவரிடைப் புண்படாமல் கோள்வாய் மறவர் வாள்வாய் முயங்கப்படுதல் என்றும், கோள்வாய் மறவரின் தலைதுமியச் செய்து என்றும் மூவடைமொழிகளால் முது குடிச் சிறப்பு அனைத்தும் கெழும உரைத்தாள்.

'வாள்வாய் முயங்கல்' வாளின் வாயால் முயங்கப் பெறுதல்; எறிந்துபடுதல் குறித்தாள். எறிந்துபடுதல், இறத்தல், பிறிதாதல் என எச்சொல்லும் சுட்டாமல் ‘வாள்வாய் முயங்குதல்' என்றாள், அத்தகைய இறந்துபாடு இன்பமே பயந்து என்றும் நிலை பெறலாலும், பீடும் பெயரும் எழுதிய பிறங்கு நிலை நடுகல்லாய்ப் பீலியும் மலரும் சாத்திப் பிறபிறர் வழிபடும் அமரர் நிலை ஆக்கும் ஆகலானும், அதனான் அன்றே, ‘களி