பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ்வளம்

12

மிளைபோய் என்னாராய், ஆடவர்க்கு உரைத்தார். 'நாம் நாளை ஊர் கொள்குவம்' என்பதில் தம்மையும் அடக்கிக் கொண்டனர். வென்ற வேந்தன், இருந்த வேந்தன் திருவோலக்கத்தில் சிறப் போடு எழுந்தருளுதலும் வீரர்க்கும், புலவர்க்கும், கூத்தர் பாணர் முதலாயினார்க்கும் தலையளி செய்தலும் வழக்காகலின்.

நாளை ஊர்கொள்குவம் எனத் துணிந்து கூறினார் சேர மானையும், அவன் படையையும் தெள்ளிதின் அறிந்த திறவோர் ஆகலின். இனிப் படைவீரர், மதிற்புறத்தே இருந்து அகப்பை துடுப்பு முதலியவற்றை மதிலுள் எறிந்து “ஊர்கொண்டாலன்றி உண்ணோம்" என்றும், "ஊர்கொண்ட பின்னரே அதனுள் அட்டுண்போம்" என்றும் வஞ்சினம் மொழியும் வழக்கும்

உண்மை புறத்துறைப் பாடல்களால் புலனாம்.

66

காலை முரசம் மதிலியம்பக் கண்கனன்று

வேலை விறல்வெய்யோன் நோக்குதலும்- மாலை அடுகம் அடிசிலென் றம்மதிலுள் இட்டார் தொடுகழலார் மூழை துடுப்பு”

என்பது புறப்பொருள் வெண்பாமாலை (117). மூழை- அகப்பை. புலியைக் கொன்று வெற்றி கொண்ட ஏறு இறந்தபோது அதன் தோலை மயிர் சீவாமல் போர்த்த முரசம் ஆகலின்,

“மயிர்க்கண் திருமுரசு”

என்றார். இதனை, “புலியைப் பொருது கொன்று நின்று சிலைத்துக் கோட்டுமண் கொண்ட ஏறு இறந்துழி அதன் உரிவையை மயிர் சீவாமற் போர்த்த முரசு. என்னை?

“புனைமருப் பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற கனைகுரல் உருமுச் சீற்றக் கதழ்விடை உரிவை போர்த்த

துனைகுரல் முரசத் தானைத் தோன்றலைத் தம்மின் என்றான் நனைமலர் அலங்கற் கண்ணி நந்தனும் தொழுது சேர்ந்தான்

எனவும்,

“கொல்லேற்றுப் பசுந்தோல் சீவாது போர்த்த

மயிர்க்கண் முரசம் ஓவில கறங்க

எனவும் சொன்னார் பிறரும்” என்னும் அடியார்க்கு நல்லார் உரையால் நன்கு தெளிக. (சிலப். 5: 76. 88)

மேற்: தொல். புறத். 12. நச்.

(46)