பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 12.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலொன்று கடல்கடக்கும் ஆயத் தங்கள்

கவின்அல்லூர் தனில்நிகழ்வ துண்மை யுண்மை;

மடைதிறந்த வெள்ளமதும் பின்னை ஓடும்

மாமேதை குறட்குமரர் வாய்தி றந்தால்; கடைவிரித்துக் கொள்ளாமல் கட்டிக் கொண்டோர் காசினியில் பலர்உருகும் இந்த நாளில், படைவென்றே ஊர்திரும்பும் பாங்கு பொங்கப் பலருமிவர் குறளமுதம் பருகச் செல்வர்!

தளர்மனத்து இளைஞர்களைக் கவர்ந் திழுக்கும் தலைவர்கள்இத் தரணிதனில் யாரு மில்லை! வளமான குறள்வேத வழிந டப்பின்

வாழ்வுசிறப் படையும்அப் பணிசெய் தற்கே

இளங்குமர அய்யாவே இருக்கின்றீர் நீர்

வளவன் பதிப்பகம்

-

- சி. நாச்சிமுத்து

2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017