பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

அசையளபு குறுகல் மகரம் உடைத்தே;

இசையிடன் அருகும் தெரியுங் காலை

93

- தொல். எழுத்து. 330

எனத் தொல்காப்பியத்துள் இன்னவிடத்துக் குறுகும்

என்று யாப்புறுத்துக் கூறிற்றில்லையேனும், ‘உரையிற்கோடல்’ என்னும் உத்தி பற்றி ‘வகரத்தின் பின் மகரம் குறுகும்,' என்று விருத்தியுள் விளங்கக் கூறினார். அதுபோலக் கொள்க.

66

இது பொருந்தாது ; என்னை? 'வகார மிசையும் மகாரம் குறுகும்'

தொல். எழுத்து. 330

என்று போக்கிச் சொன்னார் ஆகலானும், அவிநயத்துள்ளும், "முதலிடை நுனிநாப் பல்லிதழ் மூக்கின்

வன்மை முதலாம் மும்மையும் பிறக்கும்”

எனப் பொது வகையாற் கூறி, இன்னவிடத்து இன்ன எழுத்துப் பிறக்கும் என்று கணக்கியலுள் புறநடை யெடுத்தோதினார் ஆகலானும் இந்நூலுடையாரும் “மாஞ்சீர் கலியுட்புகா' (யா. கா. 40) என்னும் இதன் புறநடையானும்,

66

'நாலசைச்சீர் வெண்பாவில் நண்ணா ; அயற்பாவில்

நாலசைச்சீர் நேரீற்று நாலிரண்டாம் ; - நாலசைச்சீர் ஈறுநிரை சேரின் இருநான்கும் வஞ்சிக்கே

கூறினார் தொல்லோர் குறித்து”

என்னும் புறநடையானும், பிறவாற்றானும் விளங்கக் கூறினார்

என்க.

66

இனிப் பிற நூலுட் கூறுமாறு :

'இயற்சீர் உரிச்சீர் எனவிரு சீரும்

மயக்க முறைமையின் நால்வகைப் பாவும் 2இனத்தின் மூன்றும் இனிதின் ஆகும்

“உரிச்சீர் விரவ லாயு மியற்சீர் நடக்குந ஆசிரி யத்தொடு வெள்ளை அந்தம் தனியாய் இயற்சீர் கலியொடு வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே'

1. "மாஞ்சீர் கலியுட் புகாகலிப் பாவின் விளங்கனிவந்

2.

தாஞ்சீர் அடையா அகவல் அகத்தும்அல் லாதவெல்லாம் தாஞ்சீர் மயங்கும் தளையுமஃதேவெள்ளைத் தன்மைகுன்றிப் போஞ்சீர் கனிபுகிற் புல்லா தயல்தளை பூங்கொடியே.

பாவினங்களாகிய தாழிசை துறை விருத்தம்

-

என்னும் மூன்று.