பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

செருமதி செய் தீமையால்

பெருமை கொன்ற என்பவே’

103

- யா. வி. 21. மேற். யா. கா. 11. மேற்.

என்னும் இவ்வஞ்சி விருத்தத்துள் ஓரசைப் பொதுச்சீர் வந்தது.

66

'கை விரிந்தன காந்தளும் பூஞ்சுனை

மை விரிந்தன நீலமும் வான் செய்கண் மெய் விரிந்தன வேங்கையும் *சோர்ந்ததேன் நெய் விரிந்தன நீளிருங் குன்றெலாம்"

எனவும்,

66

குர வணங்கிலை மாவொடு சூழ்கரைச் சர வணம்மிது தானனி போலுமால் அர வணங்குவில் ஆண்டகை சான்றவன் பிரி வுணர்ந்துழி வாரலன் என்செய்கோ!”

சூளாமணி. 17

எனவும் வரும் இக்கலி விருத்தத்துள் அடிதோறும் ஓரசைப் பொதுச்சீர் வந்தது. “இவற்றை வகையுளி சேர்த்துக் கொள்க!” என்பாரும் உளர்.

நேர்நடு வஞ்சியுரிச்சீர் கலியுள்ளும் ஆசிரியத்துள்ளும்

வருதல்

16. நிரைநடு இயலா வஞ்சி உரிச்சீர்

2

கலியினோ டகவலிற் கடிவரை இலவே.

'என்பது என் நுதலிற்றோ?" எனின், விதி வகையான் விலக்குதல் நுதலிற்று.

இ-ள்) நிரை நடு இயலா வஞ்சி உரிச்சீர் - நேர் நடுவாகிய 'தேமாங்கனி, புளிமாங்கனி' என்னும் வஞ்சி உரிச்சீர், கலி யினோடு அகவலில் கடிவரை இலவே - கலியுள்ளும் ஆசிரியத் துள்ளும் வரப்பெறும் என்றவாறு.

அகவல் என்பது ஆசிரியத்தைச் சொல்லுமோ?' எனின், சொல்லும். என்னை?

66

“அகவல் என்ப தாசிரியப் பாவே”

என்பது சங்கயாப்பு ஆகலின்.

1. வகையுளி சேர்த்தால் முதலிரு சீர்களும் கைவி ரிந்தன, மைவிரிந்தன, மெய்வி ரிந்தன நெய்வி ரிந்தன எனவும், குரவ ணங்கிலை, சரவ ணம்மிது, அரவ ணங்குவில், பிரிவு ணர்ந்துழி எனவும் இயற்சீராதல் காண்க. 2. விலக்கப்பெறாது. ஆகவே வரப்பெறும் என்க. (பா. வே) *சேர்ந்ததேன்.