பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

நின்ற சீரீற் றொடுவரும் சீர்முதல்

ஒன்றுதல் ஒன்றா தாகுதல் தளையே"

என்றார் பிறரும் எனக் கொள்க.

கஅ

(நேரிசை வெண்பா)

“நின்றசீர் ஈறும் வருஞ்சீர் முதலசையும்

ஒன்றியும் ஒன்றாதும் ஓசைகொள - நின்றால் வளையொன்று முன்கையாய் ! *வந்ததனை வல்லோர் தளையென்று கட்டுரைப்பார் தாம்”

வெண்டளை

வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும்

என்றிரண் டென்ப வெண்டளைக் கியல்பே.

யா. வி. 22. மேற்.

'என்பது என் நுதலிற்றோ?" எனின், வெண்டளை இரண்டும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

-

2

(இ.ள்) வெண்சீர் ஒன்றலும் - 'வெண்பா உரிச்சீர் நின்று தன் வரும்சீர் முதலசையோடு ஒன்றலும், இயற்சீர் விகற்பமும் என்று இயற்சீர் நின்று தன் வரும் சீர் முதலசையோடு ஒன்றாததூஉம் என, இரண்டு என்ப வெண்டளைக்கு இயல்பே - வெண்டளை இயல்பாவன இரண்டு வகைப்படும் என்றவாறு. 'இயல்பே' என்ற விதப்பால், வெண்பா உரிச்சீர் நின்று வெண்பா உரிச்சீரோடு ஒன்றுதலும், இயற்சீர் நின்று இயற் சீரோடு ஒன்றாததூஉம் சிறப்புடைய, வரும் சீர் யாதானுமாக வரப்பெறும்.

'விகற்பம்' என்றது ‘ஒன்றாததனைச் சொல்லுமோ?' எனின், சொல்லும். என்னை?

66

3

இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள்

4விகற்ப வகையது வெண்டளை ஆகும்” ( காக்கைபாடினியார்.)

என்றார் ஆகலின்.

1.

அவற்றிற்குச் செய்யுள்:

- யா. வி. 21. மேற்.

யா. கா. 10. மேற்.

வெண்சீர் வெண்டளை. 2. இயற்சீர் வெண்டளை. 3. கூடல், 4. வேறுபடுதல் மாமுன் நிரையும்; விளமுன்நேரும் வருதல்.

(பா. வே) *வந்தன நூலோர்.