பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

‘தன்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முளொத் தொன்றினும் ஒன்றா தொழியினும் வஞ்சியின் 'பந்தம் எனப்பெயர் பகரப் படுமே'

என்றார் காக்கைபாடினியார்.

119

அஃதே எனின், இவர் வரும் சீரும் குறித்துக் கூறினார் அன்றோ?' எனின், அவர் அவை சிறப்புடைமை நோக்கி எடுத்து ஓதினார்; அல்லாத சீரும் உடம்பட்டார் எனக் கொள்க.

"இயற்சீர் ஒன்றா நிலையது வெண்டளை; உரிச்சீர் அதனுள் ஒன்றிய தியல்பே'

“ஈரசை இயற்சீர் ஒன்றிய நிலைமை ஆசிரி யத்தளை ஆகும் என்ப”

“வெண்சீர் இறுதி நிரைவரிற் கலித்தளை;

வஞ்சி வகைமை வரைவின் றாகும்

99

என்றார் சிறுகாக்கைபாடினியார். “ஈரசை இயற்சீர் ஒன்றிய தியல்பே” என்றார் அவிநயனார்.

"இயற்சீர் ஒன்றா நிலையது வெண்டளை; உரிச்சீர் அதனுள் ஒன்றிய தியல்பே'

"நேரும் நிரையுமாம் இயற்சீர் ஒன்றின், யாவரும் அறிப 2ஆசிரியத்தளை;

3வேறுபட வரினது வெண்டளை; 'வெண்சீர் ஆறறி புலவர்க் கொன்றினும் அதுவே”

“வெண்சீர்ப் பின்னர் நிரைவருங் காலைக் கண்டனர் புலவர் கலித்தளை யாக

“வஞ்சி உரிச்சீர் வந்தன வழிமுறை

எஞ்சிய வரினும் வஞ்சித் தளையே’

என்றார் மயேச்சுரர்.

1.

2.

தளை.

நேர்ஒன்றியது நேரொன்றாசிரியத் தளை.

நிரைஒன்றியது நிரையொன்றாசிரியத்தளை.

3. இயற்சீர் வெண்டளை. 4. வெண்சீர் வெண்டளை.