பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

766

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(கட்டளைக் கலித்துறை)

'தன்சீர் தனதொன்றிற் றன்றளை யாம்; தண வாதவஞ்சி வண்சீர் விகற்பமும் வஞ்சிக் குரித்து; வல் லோர்வகுத்த வெண்சீர் விகற்பம் கலித்தளை யாய்விடும்; வெண்டளையாம் ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும் ஒண்ணுத

எனவும்,

(கட்டளைக் கலித்துறை)

லே

"திருமழை உள்ளார் அகவல்; சிலைவிலங் காகும்வெள்ளை; மருளறு வஞ்சிமந் தாநிலம் வந்து; மை தீர்கலியின்

- யா. கா, 10

தெரிவுறு பந்தம்நல் லாய் ! செல்வப் போர்க்கதக் கண்ணன்என்ப துரிமையின் கண்ணின்மை ஓரசைச் சீருக் குதாரணமே'

எனவும் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

22.

தளைகள் மயக்கம்

வெள்ளையுட் பிறதளை விரவா; அல்லன எல்லாத் தளையும் மயங்கியும் வழங்கும்.

யா. கா. 11

(ரு)

‘என்பது என் நுதலிற்றோ?' எனின், தளை மயக்கம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) வெள்ளையுள் பிற தளை விரவா- வெண்பாவினுள் வெண்டளை அன்றி வேற்றுத்தளை வந்து மயங்கா; அல்லன - மற்று ஒழிந்த பாவிடத்தும் பாவினத்திடத்தும், எல்லாத் தளையும் மயங்கியும் வழங்கும் - வேற்றுத்தளையும் மயங்கியும் வரப்பெறும் என்றவாறு.

  • "மயங்கியும் வழங்கும்,' என்னும் உம்மை விதப்பால், எல்லாத் தளையும் மயங்கியும் வரினும், தன் தளையான் வந்த பொழுதே பாக்கள் இன்னியல்பாய் நடப்பது எனக் கொள்க. பிறரும்,

66

எல்லாத் தளையும் மயங்கினும் தன்றளை அல்லாத் தளையாற் பாவினி தியலா"

என்றார் ஆகலின். அவை விரவி வருமாறு:

1. “சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் ‘தண்சீர்’ என்னும் பாடமே கொண்டு “தன் என்பன இரண்டும் ஆசிரியப்பா முதலிய மூன்றையும் தனித்தனி சுட்டுமாறு நின்றன இ.ப.கு.

என்பர்.

(பா. வே) *மயங்கியும் வழங்கும் என்ற உம்மையால் எல்லாத் தளையும் மயங்கியும் வரினும் தன்தளையான் வரினே சிறப்புடைத்து; என்னை?

“எல்லாத் தளையும் மயங்கினும் தன்தளை

அல்லாத் தளையாற் பாவினி தியலா” என்றார் ஆகலின்.