பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

129

பாடினியார் முதலாகிய ஒருசார் ஆசிரியர் எனக் கொள்க.

என்னை?

“குறள்சிந் தளவுநெடில் கழிநெடில் என்றாங்

கனைவகை மரபின அடிவகை தானே’

என்றார் ஆகலின். 'தொல்லை' என்பது, ‘கட்டுரைத்தனரே' என இறந்த காலப் படர்க்கையொடு தழுவச் சொன்னமையாற் பெறப்பட்டது. ‘ஆசிரியர்,' என்பது ஆற்றலாற் போந்த பொருள். அணியியல் உடையாரும்.

66

'இயன்ற செய்யுட் கியைந்த பொருளை உயர்ந்த நடையால் உணரக் கூறலும்

அருங்கல மொழியால் அரிதுபடக் காட்டலும் ஒருங்கிரண் டென்ப உயர்நடைப் பொருளே'

என்னும் சூத்திரத்துள் "ஒருங்கிரண்டு' என்புழி ஆற்றலாற் போந்த பொருளை, ‘என்ப' என்னும் முற்றுச்சொல்லோடு ‘புலவர்' என்னும் பெயர் கூட்டிப் பொருளை உரைத்தார் ஆகலின், இதுவும் அவ்வாறே கொள்க.

பலவும் சிலவுமாகிய தளையொடு பொருந்திய சீர்களால் அடுத்து நடத்தலின், ‘அடி' என்பது காரணக் குறி. என்னை? “தடுத்தனர் தட்ட தளைபல தழுவியும்

  • 66

அடுத்த சீரின் அடியெனப் படுமே”

என்றார் ஆகலின்.

ச்

குறளடி முதலாகிய அடிகளே இடுகுறியானும் காரணக் குறியானும் வழங்குப. 'காரணக் குறியான் வழங்குமா றியாதோ?” எனின், மக்களில். தீரக்குறியானைக் 1‘குறளன்' என்ப ; அவனின் நடியானைச் 2‘சிந்தன்' என்ப ; குறியனும் நெடியனும் அல்லாதானே ‘அளவிற்பட்டான்' என்ப; அவனின் நெடியானை 'நெடியன்' என்ப; தீர நெடியானைக் ‘கழி நெடியன்' என்ப. அதனால், இவ்வடிக்கும் வ்வாறே பயர் சென்றன

என்ப.(க)

3

1. 2. “தேரை நடப்பன போற்குறள் சிந்தினொடு ஓரும் நடந்தன ஒண்டொடி முன்னே

3.

-சீவகசிந்தாமணி. 631.

"மக்களுள் தீரக்குறியானைக் குறளன் என்றும், அவனின் நெடியானைச் சிந்தன் என்றும், ஒப்பமைந்தானை அளவுட்பட்டான் என்றும், அவனின் நெடியானை நெடியான் என்றும், அவனின் நெடியானைக் கழிய நெடியான் என்றும் சொல்லுப. அவைபோற் கொள்க இப்பெயரென்பது” தொல். செய். 40. பேரா.

(பா. வே) *தடுத்தன தட்டத்.