பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- யா. கா.34 மேற்.

144

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“எல்லா அடியினும் இனப்பா; நாற்சீர் 'அல்லா மேலடிப் பாவினுக் கியலா'

என்றார் அவிநயனார்.

66

99

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

(வஞ்சித்துறை)

'மைசிறந்தன மணிவரை;

கைசிறந்தன காந்தளும்;

பொய்சிறந்தனர் காதலர்;

மெய்சிறந்திலர் விளங்கிழாய்!”

எனக் குறளடியாற் பாவினம் வந்தவாறு.

(வஞ்சி விருத்தம்)

“சோலை ஆர்ந்த சுரத்திடைக்

காலை யார் கழல் ஆர்ப்பவும் மாலை மார்பன் வருமாயின் நீல வுண்கணிவள் வாழுமே'

எனச் சிந்தடியாற் பாவினம் வந்தவாறு.

66

(கலி விருத்தம்)

கற்பிறங்கு சாரற் கறங்கருவி நன்னாடன்

எற்றுறந்தான் என்னில் உடையுமால் என்னெஞ்சம் முற்றுறந்தான் நிற்ப முகிழ்முலையாய்! யானினிப் பிற்றுறக்க லாவதோர் பெண்ணாப் பிறப்பேனே”

6

எனவும்,

(கலி விருத்தம் )

- யா. கா. 34. மேற்.

"தேம்பழுத் தினியநீர் மூன்றும் தீம்பலா மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும் மாம்பழக் கனிகளும் மதுத்தண் டீட்டமும் தாம்பழுத் துளசில தவள மாடமே

எனவும் அளவடியாற் பாவினம் வந்தவாறு.

(கலிநிலைத் துறை)

"யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித் தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்

1. அல்லாமல் மேலே உயர்ந்த சீர்களையுடைய அடிகள் பாவில் வாரா.

I

சூளாமணி 49