பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

66

“அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப்

பொங்கிய பூசல் பெரிது”

என உச்சரித்து வெள்ளடி ஆமாறு கண்டுகொள்க.

5.

10.

இனி, வஞ்சி விரவி வருமாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

  • “இருங்கடல் தானையொடு பெருநிலங் கவைஇ

உடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித்

தாமே ஆண்ட ஏமங் காவலர்

இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக்

காடுபதி யாகப் போகித் தத்தம் நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே அதனால், நீயும் கேண்மதி யத்தை; வீயா துடம்பொடு நின்ற உயிரும் இல்லை; மடங்கல் உண்மை; மாயமோ அன்றே;

கள்ளி வேய்ந்த முள்ளியம் பெருங்காட்டு வெள்ளில் போகிய வியலு ளாங்கண் உப்பிலாஅ அவிப்புழுக்கல்

கைக்கொண்டு பிறக்கு நோக்கா திழிபிறப்பினோன் ஈயப் பெற்று

15.

நிலங்கலன் ஆக விலங்குபலி மிசையும்

இன்னா வைகல் வாரா முன்னே

149

  • செய்ந்நனி முன்னிய வினையே

முந்நீர் வரைப்பகம் முழுவதுடன் துறந்தே

புறநானூறு 363

இதனுள் ‘உப்பிலாஅ அவிப்புழுக்கல்' எனவும், ‘கைக் கொண்டு பிறக்குநோக்காது' எனவும், 'இழிபிறப்பினோன் ஈயப்பெற்று’ எனவும் வஞ்சியடி விரவி வந்தவாறு.

66

'இயற்சீர் வெள்ளடி வஞ்சி அடியிவை

வரூஉம் அகவலும் உளவே

என்றாலும் கருதிய பொருளைப் பயக்கும். ‘அகப்பட' என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை? எனின், ‘அகத்திணை யாகிய ஆசிரியப்பாவினகத்து வஞ்சியடி விரவி வரப்பெற,’ என்றதற்கும், ‘ஒருசார் கலியடி விரவி வரும் ஆசிரியமும் உள,' என்றற்கும் வேண்டப்பட்டது.

இருங்கட லுடுத்தவிப் பொருங்கண் மாநிலங். *புறங்காட்டு (பா.வே) *செய்ந்நீ