பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

153

66

'அகத்திணை மருங்கின் அளவு மயங்கி விதப்ப மற்றவை வேறா வேண்டி

வஞ்சி அடியின் யாத்தனர் வஞ்சி அகத்திணை மருங்கின் அணையு மாறே’’

என்பது

பன்னிருபடலத்துட் பெருந்திணைப்படலத்துச்

சூத்திரம் ஆகலின்.

அஃதே எனின், பட்டினப்பாலைத் தொடக்கத்தன 'அகத்திணை வஞ்சியாம் பிற,' எனின், ‘அத்திணையகத்து வஞ்சி வருவது சிறப்பின்றாயினும், சிறுபான்மை வரப்பெறும்,’ என்பார் உளராகலின், அவையும் அமையும் என்பது. என்னை? “அகத்திணை யகவயின் நிற்ப வஞ்சி சிறப்பில எனினும் சிலவிடத் துளவே"

66

என்பது மாபுராணச் சூத்திரம் ஆகலின்.

(கட்டளைக் கலித்துறை)

“அகப்பா அகவலுள் வஞ்சிசொற் சீரடி யாயிரண்டும் 2புகப்பா லனவல்ல என்பதொல் லோர்கள்; புகரில்வஞ்சி அகப்பாப் பொருளணை யாதென்பர் நாவலர்; ஆங்கருகிப் புகப்பான் மையுமொரு சார்ப்புல வாணர் புகன்றனரே' "இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாதம் அகவலுள்ளால் மயக்கப் படாவல்ல வஞ்சி மருங்கினெஞ் சாவகவல் கயற்கணல் லாய்கலிப் பாதமும் நண்ணும் கலியினுள்ளால் 5முயக்கப் படுமுதற் காலிரு பாவும் முறைமையினே' க்காரிகையை விரித்து உரைத்துக் கொள்க.

66

ஆசிரியப் பாவின் அயற்பா அடிமயங்கும்;

ஆசிரியம் வெண்பாக் கலிக்கணாம் ; - ஆசிரியம் வெண்பாக் கலிவிரவும்; வஞ்சிக்கண் வெண்பாவின் ஒண்பா அடிவிரவா உற்று

“சீர்வண்ணம் வெள்ளைக் கலிவிரவும் ; வஞ்சியுள் ஊரும் கலிப்பாச் 'சிறுச்சிறிதே; - பாவினும்

வெண்பா ஒழித்துத் தளைவிரவும்; செய்யுளாம் வெண்பாக் கலியுட் புகும்

யா. கா. 41

-

யா. கா. 39.மேற்

என்றார் நாலடி நாற்பது உடையார் எனக் கொள்க. (Fn)

1. அகப்பொருள் குறித்து வரும் வஞ்சிப்பா.

2. புகா. 3. இணையும். 4. மிகச்சிறிது.