பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அடி இயைபு, இணை இயைபு, பொழிப்பு இயைபு, ஒரூஉ யைபு, கூழை இயைபு, மேற்கதுவாய் இயைபு, கீழ்க்கதுவாய் இயைபு, முற்று இயைபு- என இயைபினோடு கூட்டி வழங்கினவாறு. அடி அளபெடை ணை அளபெடை, பொழிப்பு அளபெடை, ஒரூஉ அளபெடை, கூழை அளபெடை, மேற் கதுவாய் அளபெடை, கீழ்க்கதுவாய் அளபெடை, முற்று அளபெடை- என அளபெடையோடு கூட்டி வழங்கினவாறு.

இவை ஒரோவொன்று எட்டெட்டுப் பாகுபாட்டைச் சொன்னவாறு கண்டு கொள்க.

66

“சீரிய' என்று மிகுத்துச் சொல்லிய அதனால், இயைபுத் தொடையை இவ்வாறு வழங்குகின்றுழி 'இறுவாய் முதலாகக் கொண்டு வழங்கப்படும் எனக் கொள்க, அஃது ஈறுபற்றி அறியும் தன்மைத்து ஆகலின்.

இயைபுத்தொடைக்கு இவ்வாறு எட்டு வகையும் சொன்னார். கையனாரும் தொல்காப்பியரும் முதலாகிய ஒருசார் ஆசிரியர். ஈண்டு அவர் மதம் பற்றிச் சொல்லப்பட்டது, இது சார்பு நூல் ஆகலின், இவற்றிற்குச் செய்யுள், போக்கித் தத்தம் இலக்கணச் சூத்திரத்துள்ளே காட்டுதும்.

(கலி விருத்தம்)

“எழுத்தியற் றொடைகளின் இடைக்கண் மாறுகோள் மொழிப்பொருட் டொடைமுறை பிறழ வைத்ததோர் இழுக்கியல் பிலாநிரல் நிறையும் எட்டென

ஒழுக்கினர் உண்மையை உணர்த்தல் வேண்டியே’

இதனை விரித்து உரைத்துக் கொள்க.

அவை ஆமாறு போக்கி, 'நிரனிறை முதலிய' (யா.வி.95) என்னும் சூத்திரத்துள்ளே காட்டுதும்.

அடிமோனைத் தொடை

35. ஆதி எழுத்தே அடிதொறும் வரினடி

மோனைத் தொடையென மொழிமனார் புலவர்.

(உ)

'என்பது என் நுதலிற்றோ?' எனின், நிறுத்த முறையானே அடிமோனைத் தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) முதலடி முதற்கண் வந்த எழுத்தே எல்லா அடி முதற்கண்ணும் வரின், அதனை ‘அடிமோனைத் தொடை என்று வழங்குவர் புலவர் என்றவாறு.

1. இறுதி