பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

“விட்டிசை மோனையும் இடையிட் டெதுகையும் ஒட்டி வரூஉம் ஒருசாரும் உளவே"

என்றார் ஆகலின்.

வரலாறு:

(குறள் வெண்பா)

177

  • 66
  • "அஉ அறியா அறிவில் இடைமகனே ! 'நொஅலையல் நின்னாட்டை நீ”

யா. வி. 7. 95. மேற்

-(இடைக்காடனார்) யா. கா. 37. மேற்.

இதனுள் முதலெழுத்து இரண்டும் 2அளவொத்து விட்டிசைத்

தமையால், விட்டிசை மோனை.

(நேரிசை ஆசிரியப்பா)

“தோடார் எல்வளை நெகிழ நாளும் நெய்தல் உண்கண் ’பைதல் கலுழ வாடா அவ்வரி *வகைஇப் பசலையும் வைகல் தோறும் பைப்பையப் பெருகலின் நீடார் இவணென *நீள்மணங் கொண்டோர் கேளார் கொல்லோ காதலர் தோழி! வாடாப் பௌவம் அறமுகந் தெழிலி

பருவம் *செய்யாது வலனேர்பு வளைஇ

கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே"

ஓடா மலையன் வேலிற்

யா. வி. 95. மேற்

யா.கா. 41. மேற்

இஃது அடி இடையிட்டு எதுகை வந்தமையால், இடையிட் டெதுகை.

எல்லா எதுகைக்கும் முதலசை நேர்க்கு நிரையும், நிரைக்கு நேரும் வாரா; நேர்க்கு நேரும், நிரைக்கு நிரையுமே வருவது எனக் கொள்க. என்னை?

6

"நிரைநேர் மறுதலை அடையா தம்முளும் எதுகை முதலசை என்மனார் புலவர்

எனவும்,

“யாவகை எதுகையும் அசைமுறை பிறழாப் பாவகை நான்காம் பகருங் காலை

எனவும் சொன்னார் ஆகலின்.

1. துன்புறுத்தாதே. 2. மாத்திரைஒத்து. 3. துன்பம். (பா. வே) *அஉம், *புதைஇப் *நீமனங். *பொய்யாது.