பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(இன்னிசை வெண்பா)

“அலைப்பான் பிறவுயிரை ஆக்கலும் குற்றம்; 'விலைப்பாலிற் கொண்டூன் "மிசைதலும் குற்றம்; சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்; கொலைப்பாலும் குற்றமே யாம்

இஃது எதுகை இயைபுத் தொடை.

(இன்னிசை வெண்பா)

"இருளிற் கெரிவிளக் கென்றும் பகையே; அருளிற் 3கலைவாழ்க்கை அஃதும் பகையே; மருளிற்கு 4வாலறிவு மாயாப் பகையே; பொருளிற்கஃ 5தின்மை பகை

இது முரண் இயைபுத் தொடை.

99

189

நான்மணிக் கடிகை 26.

(குறள் வெண்ா)

666

ஏஎ வழங்கும் சிலையாய் இரவாரல்

7.

மாஅம் வழங்கும் வரை

- யா. வி. 41. மேற்.

இஃது அளபெடை இயைபுத் தொடை

(நேரிசை ஆசிரியப்பா)

“பரவை மாக்கடல் தொகுதிரை வரவும்

பண்டைச் செய்தி இன்றிவண் வரவும்

பகற்பின் °முட்டா திரவினது வரவும்

பசியும் 'ஆர்கையும் வரவும்

1°பரியினும் போகா துவப்பினும் வருமே”

– யா. வி. 95. மேற்.

இது மோனையும் முரணுமாய் வந்து இறுவாய் ஒத்தமை யால், மயக்கு இயைபுத் தொடை.

66

(நேரிசை ஆசிரியப்பா)

“ஓங்குவரை" அமன்ற வேங்கைநறு மலரும் ஊர்கெழு நெய்தல் வார்கெழு மலரும்

பழனத் தாமரை எழினிற மலரும்

இல்லயற் புறவின் முல்லைவெண் மலரும்

1. விலையால். 2. உண்ணல். 3. கொலைவாழ்க்கை. 4. மெய்யறிவு. 5. இல்லாமை; வறுமை. 6. அம்பு. 7. விலங்கு. 8. தடையில்லாது. 9. உண்ணல். 10. தடுத்து நிறுத்தினும். 11. செறிந்த.