பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

'உராஅங் கடற்றிரை 2விராஅ மலரும்

வேறுபட 3மிலைச்சிய நாறிருங் குஞ்சி

ஏந்தல் பொய்க்குவன் எனவும் பூந்தண் உண்கண் புலம்பா னாவே"

யா. வி. 53. மேற்.

இது பொழிப்பு எதுகையும் பொழிப்பு அளபெடையுமாய் வந்து இறுவாய் ஒத்தமையால், மயக்கு இயைபுத் தொடை.

மயக்கு இயைபுத் தொடைக்கு இலக்கணம் பலரும் “ஈறு பிறிதாய் வந்த தாயினும் ஆம்,' என உரைப்பாரும் உளர் எனக் கொள்க. அது போக்கித் ‘தொடைபல தொடுப்பினும்' (யா.வி. 55) என்னும் சூத்திரத்துட் காட்டுதும்.

இயைபுத் தொடைக்கு இலக்கணம் பிறரும் இவ்வாறு

சொன்னார். என்னை?

“இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே”

என்றார் தொல்காப்பியனார்.

66

இறுவாய் ஒப்பினஃ தியைபென மொழிப”

0

என்றார் அவிநயனார்.

"இயைபே இறுசீர் ஒன்றும் என்ப”

என்றார் பல்காயனார்.

- தொல். செய். 95

இறுசீர் ஒன்றின் இயைபெனப் படுமே’

99

என்றார் நற்றத்தனார்.

(அ)

அடி அளபெடைத் தொடை

சக. அளபெடை ஒன்றுவ தளபெடைத் தொடையே. என்பது என் நுதலிற்றோ?' எனின், நிறுத்தமுறையானே 'அளபெடைத் தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(2). இ.ள்) அடிதொறும் முதற்சீர்க்கண் அளபெடுத்து ஒன்றிவரின், அஃது ‘அடி அளபெடைத் தொடை' எனப்படும் என்றவாறு.

இச் சூத்திரத்துள் ‘முதற்சீர்' என்பது இல்லை யாயினும், இருசீர் மிசைவரத் தொடுப்பதை இணையே” - யா. வி. 42. மேற். என்னும் சூத்திரத்தினின்றும், 'சீர்' என்றும் 'முதல்' என்றும் சிங்க நோக்கு அதிகாரம் வர உரைக்கப்பட்டது எனக் கொள்க. ‘ஒன்றுவது’ என்பது,

1. உலாவும். 2. கலந்த. 3. அணிந்த.