பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

213

மூன்றும் ஒவ்வாது வந்தும், 'அனுவும் இனமும் இன்றி முரணாக் ணாக் கிடப்பது செந்தொடை என்றவாறு. என்னை? “அசையினும் சீரினும் இசையினும் எல்லாம் இசையா தாவது செந்தொடை தானே'

என்றார் *பல்காயனார்.

66

“ஒன்றா தாவது செந்தோடைக் கியல்பே

என்றார் நற்றத்தனார்.

266

“செம்பகை யல்லா மரபினதாம் தம்முள் ஒன்றா நிலையது செந்தொடை யாகும்”

என்றார் காக்கைபாடினியார்.

“மாறல தொவ்வா மரபின செந்தொடை”

என்றார் அவிநயனார்.

யா. கா. 17. மேற்.

அவற்றை அசை விரளச் செந்தொடை, சீர் விரளச் செந்தொடை, இசை விரளச் செந்தொடை, முழு விரளச் செந்தொடை எனப் பெயரிட்டு வழங்குவாரும் உளரெனக் கொள்க. அவற்றுட் சில வருமாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

‘பூத்த வேங்கை வியன்சினை ஏறி

மயிலினம் அகவும் நாடன்

நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே'

- தமிழ்நெறி விளக்கம் 17. தொல். செய். 100பேரா.

யா. கா. 18. மேற்

எனவும்,

66

66

(நேரிசை ஆசிரியப்பா)

இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம் புலாஅன் மறுகிற் சிறுகுடிப் பாக்கத்

1. 'தானமொத்த குறிலும் நெடிலும் தம்முள் இனமாம்.

அகர ஆகார ஐகார ஔகாரங்கள் தம்முள் இனமாம். இகர ஈகார எகர ஏகாரங்கள் தம்முள் இனமாம். உகர ஊகார ஒகர ஓகாரங்கள் தம்முள் இனமாம்.

உயிர் மெய்க்கும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. ஒற்றினுள் சகர தகரங்கள் தம்முள் இனமாம். ஞகர நகரங்கள் தம்முள் இனமாம். மகரவகரங்கள் தம்முள் இனமாம்.

இவை அனுவென்றும் வழங்கப்படும்”

2. முரண்டொடை.

(பா. வே) *காக்கைபாடினியார்; கையனார்.

- யா. கா. 41; யா. வி. 53 உரை காண்க.