பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

766

யாப்பருங்கலம்

(இன்னிசை வெண்பா)

அடல்வேல் அமர்நோக்கி ! நின்முகம் கண்டே உடலும் இரிந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும் கடலும் கனையிருளும் ஆம்பலும் பாம்பும் தடமதியம் ஆமென்று தாம்’

என்பதும் கண்டுகொள்க.

99

217

யா. வி. 95. வி.95.

தொல்.செய். 91. மேற். பேரா. இளம்.

அவற்றுள் ஒரு பொருள் இரட்டை, பல பொருள் இரட்டை, ஒரு முற்று இரட்டை, இரு முற்று இரட்டை என்று பெயரிட்டு வழங்குவாரும் உளர் எனக் கொள்க.

அந்தாதித் தொடை

52. ஈறு முதலாத் தொடுப்பதந் தாதியென்

றோதினர் மாதோ உணாந்திசி னோரே.

(ககூ)

என்பது என் நுதலிற்றோ?' எனின், அந்தாதித் தொடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ.ள்) ‘எழுத்தும், அசையும், சீரும், அடியும் இறுவாய் 2எழுவாயாகத் தொடுப்பது அந்தாதித் தொடை, மொழிந்தனர் புலவர் என்றவாறு.

என்று

ஈறு முதலா' எனவே, எழுத்தும், அசையும், சீரும், அடியும் இவற்றது முதலாகவே அடங்கும் எனக் கொள்க.

என்னை?

66

“அடியும் சீரும் அசையும் எழுத்தும்

முடிவு முதலாச் செய்யுள் மொழியினஃ தந்தாதித் தொடையென் றறையல் வேண்டும்"

எனவும்,

3

“அசையினும் சீரினும் அடிதொறும் இறுதியை 'முந்தா இசைப்பினஃ தந்தாதித் தொடையே” எனவும் பிறரும் கூறினார் ஆகலின்; “பிறநூல் முடிந்தது தானுடம் படுதல்”

யா. கா. 17. மேற். (நற்றத்தனார்)

- நன்னூல். 14.

என்னும் தந்திர உத்தியான், இவ்வாறு உரைக்கப்பட்டது எனினும் இழுக்காது.

‘ஈறு முதலா' என்றது, ‘இறுதி முதலாக' என்றவாறு.

1. நின்முகம் தடமதியம் ஆமென்று கடலும் உடலும்; கனையிருளும் இரிந்தோடும்; ஆம்பலும் மலரும்; பாம்பும் பார்க்கும் என இயைக்க. இது வினை நிரல் நிறை. 2, 3. முதலாக.