பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

வரலாறு:

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(ஆசிரிய இணைக்குறட்டுறை)

"இரங்கு குயில்முழவா இன்னிசையாழ் தேனா

அரங்கம் அணிபொழில ஆடும்போலும் இளவேனில்!

அரங்கம் அணிபொழில ஆடு மாயின்

மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில்'

என்றாற்போலக் கொள்க.

ஈறு முதலாத் தொடுப்பதந்தாதி

- யா. வி. 76. மேற்.

யா.கா. 29. மேற்.

என்ப உணர்ந்தி

சினோரே’, என்னாது என்னாது 'ஓதினர் மாதோ" என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?

இறுதியடியின் இறுதியும், முதலடியின் முதலும் ஒன்றாய் வருவனவற்றை ‘மண்டல அந்தாதி' என்றும், அவ்வாறு வாராதனவற்றைச் ‘செந்நடை அந்தாதி' என்றும், பல விரவி வருவனவற்றை ‘மயக்கு அந்தாதி’ என்றும், எழுத்து அசை சீர்களால் இடையிட்டு வந்த அடியந்தாதியை ‘இடையிட்ட அடியந்தாதி' என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

அவர் கூறுமாறு : மண்டல எழுத்தந்தாதி, செந்நடை எழுத்தந்தாதி, மண்டல அசையந்தாதி, செந்நடை அசையந்தாதி, மண்டலச் சீரந்தாதி, செந்நடைச் சீரந்தாதி, மண்டல அடியந்தாதி, செந்நடை அடியந்தாதி, மண்டல மயக்கந்தாதி, செந்நடை மயக்கந்தாதி, மண்டல இடையிட்ட அடியந்தாதி, செந்நடை இடையிட்ட அடியந்தாதி எனக் கொள்க.

அவற்றுட் சில வருமாறு:

(நிலைமண்டில ஆசிரியப்பா)

“வேங்கையஞ் சாரல் ஓங்கிய மாதவி

விரிமலர்ப் பொதும்பர் மெல்லியல் முகமதி திருந்திய சிந்தையைத் திறைகொண் டதுவே.” து மண்டல எழுத்தந்தாதி.

(நிலைமண்டில ஆசிரியப்பா)

“பேதுற விகந்த பெருந்தண் காவிரி

விரிதிரை தந்த வெறிகமழ் வாசம்