பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

(தரவு கொச்சகம்)

“கழிமலர்ந்த காவிக் களிவண்டு பாடக் குழிமலர்ந்த நீலம் குறுமுறுவல் கொள்ளும்; குழிமலர்ந்த நீலம் குறுமுறுவல் கொள்ளப் பொழில்மலர்ப்பூம் புன்னையின் நுண்டாது சிந்தும்”

இதுவும் இடையிட்ட அடியந்தாதி.

221

பன்மணி மாலையும், மும்மணிக் கோவையும், 'உதயணன் கதையும், தேசிகமாலையும் முதலா உடைய தொடர்நிலைச் செய்யுள்களும் அந்தாதியாய் வந்தவாறு கண்டு கொள்க.

செந்நடை எழுத்தந்தாதியும், செந்நடை அசையந்தாதியும், மண்டலச் சீரந்தாதியும், மண்டல இடையிட்ட அடியந்தாதியும், செந்நடை இடையிட்ட அடியந்தாதியும் வந்தவழிக் கண்டு கொள்க.

மோனையாய் வந்தன மோனையந்தாதி, எதுகையாய் வந்தன எதுகை யந்தாதி, முரணாய் வந்தன முரணந்தாதி, இயைபாய் வந்தன இயைபந்தாதி, அளபெடையாய் வந்தன அளபெடையந்தாதி என இவ்வாற்றால் வந்த வகையாற் பெயர் கொடுத்து வழங்கப்படும்.

வரலாறு:

(நிலைமண்டில ஆசிரியப்பா)

“மேனமக் கருளும் வியனருங் கலமே மேலக விசும்பின் விழவொடு வருமே மேருவரை அன்ன விழுக்குணத் தவமே மேவதன் றிறநனி மிக்கதென் மனமே”

WIT. ON. 96. CLDGİT.

இது மோனையந்தாதி. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

66

(கட்டளைக் கலித்துறை)

‘அந்தம் முதலாத் தொடுப்பதந்த தாதி ; அடிமுழுதும் வந்த மொழியே வருவ திரட்டை ; வரன்முறையால் முந்திய மோனை முதலா முழுதுமொவ் வாதுவிட்டால் செந்தொடை நாமம் பெறும்நறு மென்குழற் றேமொழியே!” "மாவும்புள் மோனை; இயைபின் னகை; வடியே ரெதுகைக் கேவில் முரணும் இருள்பரந் தீண்டள பாஅவளிய;

1. பெருங்கதை.

யா. கா. 17.