பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

2

யாப்பருங்கலம்

(தரவு கொச்சகம்)

'வேதவாய் மேன்மகனும் வேந்தன் மடமகளும் நீதியாற் சேர நிகழ்ந்த நெடுங்குலம்போல்

ஆதிசால் பாவும் 3அரசர் வியன்பாவும் ஓதியவா றொன்ற மருட்பாவாய் ஓங்கிற்றே”

எனவும்,

241

- யா. கா. 35. மேற்.

-யா. வி. 94. மேற்.

(கட்டளைக் கலித்துறை)

"பண்பார் புறநிலை பாங்குடைக் கைக்கிளை வாயுறை வாழ்த் தொண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை 'ஊனமில்லா வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால் வண்பால் மொழிமட வாய் ! மருட் பாவெனும் வையகமே

எனவும் இவற்றை விரித்துரைத்துக் கொள்க.

66

யா. கா. 35.

கங்கை யமுனைகளது சங்கமம் போலவும் சங்கர நாராயணரது சட்டகக் கலவியே போலவும் வெண்பாவும் ஆசிரியமுமாய் விராய்ப் புறநிலை வாழ்த்து முதலாகிய பொருள்கண்மேல் யாப்புற்று மருட்சியுடைத்தாகப் பாவி நடத்தலின், 'மருட்பா' என்று வழங்கப்படும்,' என்பாரும் உளர்.

56

இனி, ஒருசார் ஆசிரியர், வெண்பாவும் ஆசிரியப்பாவும் ஒத்து வருவனவற்றைச் 5“சம மருட்பா' என்றும், ஒவ்வாது வருவனவற்றை “வியன் மருட்பா' என்றும் பெயரிட்டு வழங்குவர்.

அவை கூட்டி வழங்குமாறு; புறநிலை வாழ்த்துச் சம மருட்பா, புறநிலை வாழ்த்து வியன் மருட்பா, வாயுறை வாழ்த்துச் சம மருட்பா, வாயுறை வாழ்த்து வியன் மருட்பா, செவியறிவுறூஉச் சம மருட்பா, செவியறிவுறூஉ வியன் மருட்பா, கைக்கிளைச் சம மருட்பா, கைக்கிளை வியன் மருட்பா எனக் கொள்க.

1.

மறையோன். 2. வெண்பா. 3. அகவல். 4.குறையில்லா. 5. சமனிலை மருட்பா. 6. வியனிலை மருட்பா.