பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல் இன்றி வருவன இன்னிசை வெண்பா என்றார் சிறுகாக்கைபாடினியார்.

“ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல் இன்றி நடப்பினஃ தின்னிசை வெண்பா'

என்றார் அவிநயனார்.

766

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

(ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)

‘துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க :

3

அகடுற யார்மட்டும் நில்லாது செல்வம்

சகடக்கால் போல வரும்"

எனவும்,

66

“வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்”

271

நாலடியார் 2.

நாலடியார் 39

-யா. வி. 57. மேற்.

6 எனவும் இவை ஒரு விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா.

6

(பல விகற்ப இன்னிசை வெண்பா)

“வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை; அளந்தன “போகம் அவரவ ராற்றால்;

விளங்காய் திரட்டினார் இல்லை; களங்கனியைக் காரெனச் செய்தாரும் இல்”

எனவும்,

66

“தலைக்கட் டலையைந்தும் காணேன் கடைக்கணேல் என்னா இருவரும் இங்கில்லை ; பொன்னோடை ஆழியாய் ! நன்மை அறிந்தேன் அலைகடல்சூழ் ஏழியான் இக்கிடந்த ஏறு

6 எனவும்,

“வடிமலர்த்தார் நாகர் மணிக்கவரி வீச,

முடிமலர்த்தேம் போதிமையோர் தன்னடிக்கீழ்ப் பெய்ய, இனிதிருந்து நல்லறம் சொல்லியான் எல்லாத் துனியிருந்த துன்பந்தீர்ப் பான்

எனவும்,

1. குற்றமற்ற. 2. உணவு. 3. நிலையாக. 4. நுகர்வு.

நாலடியார் 103.