பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

ஒத்த விகற்பம் பஃறொடை வெண்பா, ஒவ்வா விகற்பம் பஃறொடை வெண்பா என்று இரண்டு விகற்பப்படும் என்பது அறிவித்தற்குச் சொல்லப்பட்டது.

வரலாறு:

166

(ஒரு விகற்பப் பஃறொடை வெண்பா) 'சேற்றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேல், கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி, பொருகயல்,

தோற்றம் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம் வேற்றுமை இன்றியே ஒத்தன *மாவடர் ஆற்றுக்கா லாட்டியார் கண்

99

தொல். செய். 114. இளம்.

யா. கா. 24. மேற்.

ஃது ஒரு விகற்பத்தான் வந்த ஐந்தடிப் பஃறொடை வெண்பா.

(பல விகற்பப் பஃறொடை வெண்பா)

“பன்மாடக் கூடல் மதுரை *நெடுந்தெருவில்

என்னோடு நின்றார் இருவர் அவருள்ளும்

பொன்னோடை நன்றென்றாள் நல்லளே - பொன்னோடைக்

கியானைநன் றென்றாளும் 2அந்நிலையள்

யானை

  • எருத்தத் திருந்த இலங்கிலைவேற் றென்னன் திருத்தார்நன் றென்றேன் “தியேன்"

தொல். செய். 114. இளம்.

து பல விகற்பத்தால் வந்த ஆறடிப் பஃறொடை வெண்பா.

66

(பல விகற்பப் பஃறொடை வெண்பா)

வையக மெல்லாம் கழனியாம் ; -வையகத்துச் செய்யகமே *நாற்றிசையும் தேயங்கள் ; -செய்யகத்து வான்கரும்பே தொண்டை வளநாடு ; - வான்கரும்பின் சாறேஅந் நாட்டுத் தலையூர்கள் ; - சாறட்ட

கட்டியே கச்சிப் புறமெல்லாம் ; - கட்டியுள் தானேற்ற மான சருக்கரை மாமணியே

ஆனேற்றான் கச்சி யகம்

யா. கா. 24. மேற்.

து பல விகற்பத்தால் வந்த ஏழடிப் பஃறொடை வெண்பா.

1.

மாவடுவைப் பொருத ஆற்றுக்கால் ஆட்டியர் (மருதநிலப் பெண்) கண், நீலம், பகழி (அம்பு) கயல் இவற்றொடு தோற்றம். தொழில், வடிவு, தடுமாற்றம் இவற்றின் ஒத்தன. 2. நல்லள். 3. பிடர். 4. தீயேன்.

(பா. வே) *மாவேடர் *பெருந்தெருவில். *நாற்றிசையின்.