பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

குறட்டாழிசை

279

கச.

அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவும்

சந்தழி குறளும் தாழிசைக் குறளே.

ச்சூத்திரம், குறட்டாழிசை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

-

(இ.ள்) அந்தடி குறைநவும் இரண்டடியாய் ஈற்றடி குறைந்து வருவனவும் (‘இரண்டடி' என்பது, அதிகார வரைவி னால் உரைக்கப்பட்டது), செந்துறைச் சிதைவும்- விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இன்றி வெண்செந் துறையிற் சிதைந்து இரண்டடியும் ஒத்துவருவனவும், சந்தழி குறளும் செப்பலோசையிற் சிதைந்து வந்த குறள் வெண்பாவும், தாழிசைக் குறளே - ‘குறட்டாழிசை' என்றும் ‘தாழிசைக் குறள்’ என்றும் வழங்கப்படும் என்றவாறு.

அவற்றுக்குச் செய்யுள் வருமாறு:

(குறட்டாழிசை)

“நீல மாகடல் நீடு வார்திரை நின்ற போற்பொங்கிப் பொன்றும் ஆங்கவை

காலம்பல காலம் சென்று செல்வ யாக்கை கழிதலுமே'

எனவும்,

166

பாவடிமத யானை மன்னர்கள்

பைம்பொன் நீள்முடி மேல்நிலாவிய

சேவடி எங்கோமான் செழும்பொன் எயிலவனே'

எனவும்,

66

'நண்ணு வார்வினை நைய நாடொறும்

நற்ற வர்க்கர சாய ஞானநற்

கண்ணினான் அடியே அடைவார்கள் கற்றவரே”

எனவும்,

66

'தண்ணந் தூநீர் ஆடச் சேந்த

2

வண்ண ஓதி கண்

99

யா. கா. 26. மேற்.

யா. கா. 26. மேற்.

எனவும் இவை ரண்ட டியாய், ஈற்றடி குறைந்து வந்த

குறட்டாழிசை.

“உறிபோல் நரம்பெ ழுந்தும் 'பளத்தி

சிறியள் செவிசிந் திலபொரித் தனவே”

எனவும்,

1. அகன்ற அடி. 2. அழகிய கூந்தலள். 3. பள்ளத்தி. (பா. வே) *பைம்பொன்னின்.