பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மேல் மூன்று வந்து நடப்பன ‘வெள்ளொத்தாழிசை' எனப்படும் என்றற்கும்; வெள்ளொத்தாழிசை கொள்ளாது, பிற தளை தட்டு, ஒன்றாயும் இரண்டாயும் ஒரு பொருண்மேல் மூன்றாயும், மூன்றின் மிக்கு வருவனவும் எல்லாம் 'வெண்டாழிசை' எனப்படும் என்பது அறிவித்தற்கும் வேண்டப்பட்டது.

பிறரும்,

“ஈரடி முக்கால் இசையினும் தளையினும் வேறுபட் டியல்வன வெண்டா ழிசையே”

என்றார் எனக் கொள்க.

வெள்ளோசை கொண்டு வேற்றுத்தளை விரவாது ஒரு பொருண்மேல் மூன்றாயும்; வள்ளோசை தழுவாது

வேற்றுத்தளை விரவி ஒரு பொருண்மேல் ஒன்றாயும், இரண்டு இணைந்தும், மூன்றின் மிக்கும், மூன்று அடுக்கிப் பொருள் வேறாயும் வருவன எல்லாம் “ஈரடி முக்கால்' என்னும் வெண்பாவின் இனமெனக் கொள்க.

66

2

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

(வெள்ளொத்தாழிசை)

அன்னாய் ! அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி 'ஒன்னார் உடைபுறம் போல நலங்கவர்ந்து

துன்னான் துறந்து விடல்?”

“ஏடீ! அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி

கூடார் உடைபுறம் போல நலங்கவர்ந்து

3வீடான்* துறந்து விடல்?'

“பாவாய் ! அறங்கொல் நலங்கிளர் சேட்சென்னி

மேவார் உடைபுறம் போல நலங்கவர்ந்து

காவான் துறந்து விடல்?'

1

2

3

யா. கா. 27 மேற். 3

என வை வெள்ளோசை கொண்டு வேற்றுத்தளை விரவாது, ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி வந்தமையின், வெள்ளொத்தாழிசை.

1. பகைவர். 2. நெருங்காதவனாக. 3. மீட்டும் தாரானாக.

(பா. வே) *நீடான். *மணியனையான்.