பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

இ.ள்)

இளங்குமரனார் தமிழ் வளம் – 13 ♡

ள்) அகவல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடைய நான்கு ஆசிரியப்பாவும், 'ஏ’ என்றும், ‘ஓ' என்றும், ‘ஈ‘ என்றும், ‘ஆய்' என்றும், 'என்' என்றும், 'ஐ' என்றும் இறும் என்றவாறு. ‘அகவல்’ என்பது, ‘ஆசிரியம்' என்றவாறு. என்னை? அகவல் என்ப தாசிரியப் பாவே'

என்றாராகலின்.

-

- (சங்கயாப்பு)

-யா. வி. 16. 27. மேற்.

ஏ, ஓ, ஈ' என்புழி 'ஏ' என்னும் அசைச்சொல்லை முன் வைத்தமையால், ‘ஏ’ என்று இறுவது சிறப்புடைத்து. என்னை? “சிறப்புடைப் பொருளை முந்துறக் கிளத்தல்”

என்பது தந்திர உத்தியாகலின்.

66

அகவல் இசையன அகவல்; அவை

ஏஓ ஈஆய் என்ஐ என்றிறும்”

என்னாது, ‘மற்று' என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?

ஏந்திசை அகவலும், தூங்கிசை அகவலும், ஒழுகிசை அகவலும் என மூன்று வகைப்படும் அகவல் ஓசை என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது ;

166

"நேர்நேர் இயற்றளை யான்வரும் அகவலும், நிரைநிரை இயற்றளை யான்வரும் அகவலும், ஆயிரு தளையுமொத் தாகிய அகவலும், ஏந்தல் தூங்கல் ஒழுகல் என்னா ஆய்ந்த நிரல்நிறை ஆகும் என்ப”

մ யா. கா. 21 மேற்.

என்றாராகலின்.

(நேரிசை ஆசிரியப்பா)

“போது சாந்தம் பொற்ப ஏந்தி

3

ஆதி நாதற் சேர்வோர்

சோதி வானம் துன்னு வோரே

Մ

யா. கா. 5,21. மேற்.

என்பது ஏந்திசை அகவல் ஓசை.

1.

நேரொன்றாசிரியத் தளையான் வருவது ஏந்திசை அகவல், நிரையொன்றாசிரியத் தளையான் வருவது தூங்கிசை அகவல், இருவகைத் தளையும் கலந்து வருவது ஒழுகிசை அகவல். 2. பொலிவுபெற 3. முதல் தீர்த்தங்கரர்.