பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

ஆசிரிய நேர்த்துறை, ஆசிரிய இணைக்குறட்டுறை, ஆசிரிய நிலை விருத்தம், ஆசிரிய மண்டில விருத்தம் என்று கூறுபடுப்ப, ஆறாம். அவை சிறப்புடை ஏழு தளையாலும் சிறப்பில் ஏழு தளையாலும் கூறுபடுப்ப, எண்பத்து நான்காம். பிறவாற்றாலும் விகற்பிக்கப் பலவாம்.

அவற்றுள் ஓரடி குறைந்து வருவனவற்றை நேரிசை ஆசிரியப்பாவின் இனம் என்றும், ஈரடி குறைந்து வருவன வற்றை இணைக்குறள் ஆசிரியப்பாவின் இனமென்றும், அடிமறியாய் வருவனவற்றை மண்டில ஆசிரியப்பாவின் என்றும், அடிமறி இன்றியே நின்றவாறே நின்று பொருள் பயப்பன நிலைமண்டில ஆசிரியப்பாவின் இனம் என்றும் இவ்வாறே ஒரு புடை ஒப்புமை நோக்கிப் 'பாச்சார்த்தி வழங்கப்படும் எனக் கொள்க. என்னை?

இனம்

66

(நேரிசை வெண்பா)

“அகவற் கினமாய ஆறினையும் ஈரேழ்

பகுதித் தளையவற்றாற் பார்ப்பத் - தொகுதிக்கண் எண்பத்து நான்காம் ; இனியவற்றின் மிக்கனவும் பண்புற்றுப் பார்த்துக் கொளல்

ஆசிரியப்பாவும் அதன் இனமும் முடிந்தன.

கலிப்பா

எஅ. துள்ளல் இசையன கலிப்பா ; மற்றவை

வெள்ளையும் அகவலு மாய்விளைந் திறுமே.

(உச)

இஃது என் நுதலிற்றோ?' எனின், நிறுத்த ஓசையாக பொது வகையாற் கலிப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) துள்ளல் ஓசையைத் தமக்கு முறையானே உடைய எல்லாம் கலிப்பா ; அவை வெண்பாவும் ஆசிரியப்பாவுமாய் இறும் என்றவாறு.

266

“பிறிதின் நடப்பினும் வஞ்சியும் கலியும்

இறுதி மருங்கின் ஆசிரி யம்மே’

'கலியே வெண்பா வாயினும் வரையார்

என்றார் ஆகலின்.

66

'துள்ளல் இசையன கலியே;

வெள்ளையும் அகவலு மாய்விளைந் திறும்”

1. பாவொடு சார்த்தி (பாவொடு ஒப்பிட்டு நோக்கி)

2. பிறிதொரு வகையால் நடந்தாலும்.