பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

321

தரவு கொச்சகம் முதலாக உடை யன. காரணக் குறியாய் நின்றன. அவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா

அஉ. தரவொன்று தாழிசை மூன்றும் சமனாய்த்

தரவிற் சுருங்கித் தனிநிலைத் தாகிச்

சுரிதகம் சொன்ன இரண்டினுள் ஒன்றாய்

நிகழ்வது நேரிசை ஒத்தா ழிசையே.

(உஅ)

இஃது என் நுதலிற்றோ?' எனின், நிறுத்த முறையானே நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

'தரவு' எனினும், ‘எருத்தம்’ எனினும் ஒக்கும். 'தாழிசை' எனினும்,

ஒக்கும்.

டைநிலைப்பாட்டு' எனினும்

‘தனிச்சொல்' எனினும், 'இடைநிலை' எனினும், 'கூன்' எனினும் ஒக்கும்.

“சுரிதகம்' எனினும், ‘அடக்கியல்' எனினும், 'வாரம்’ எனினும் 'வைப்பு' எனினும், 'போக்கியல்' எனினும் ஒக்கும்.

L

(இ.ள்) தரவு ஒன்று ‘தரவு” என்னும் உறுப்பு முதற் கண்ணே வந்து, தாழிசை மூன்றும் சமனாய் - (தரவின் பின்னர்த்) தாழிசை' என்னும் இரண்டாம் உறுப்பும் தம்முள் ஒத்து மூன்றாய் வந்து, தரவிற் சுருங்கி - (அத்தாழிசை ஒரோ ஒன்றாய்த்) தரவிற் குறைந்து, ‘தரவிற் சுருங்கி' என்பதனை ‘மூன்று தாழிசை யுமாய்த் தரவிற் சுருங்கி' என்று கொள்ளலாமோ?' எனின்,

கொள்ளலாம். என்னை?

“இடைநிலைப் பாட்டே,

தரவகப் பட்ட மரபிற் றென்ப

(பொ. 446) என்றார் தொல்காப்பியனார் ஆகலானும், 'ஒரோ ஒன்றே அத்தரவின் அகப்பட்டது' என்றே கொள்ளப்பட்டது ஆகலானும், ‘பல்பொருட் கேற்பின் நல்லது கோடல்' - (தொல். பொ. 665) என்பது தந்திர உத்தி ஆகலானும், அதுவே துணிபு. தனி நிலைத்து ஆகி - (தாழிசைப்பின்) 'தனிச்சொல்' என்னும் மூன்றாம் உறுப்பு உடைத்தாய், சுரிதகம் சொன்ன இரண்டி னுள் ஒன்றாய் - 'சுரிதகம்' என்னும் நான்காம் உறுப்பு மேற் சொல்லப்பட்ட வெண்பாவானும் ஆசிரியப்பாவானுமாய் வந்து, நிகழ்வது நேரிசை ஒத்தாழிசை - (நான்கு உறுப்பினானும் வந்தது) யாது? அது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா என்று வழங்கப்படும் என்றவாறு.

1. தரவு தாழிசை என்னும் இரண்டு உறுப்புக்களை முன்னே கூறினமையால் மூன்றாம் உறுப்பு என்றார்.