பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

“நீர்த்திரை போல நிரலே முறைமுறை ஆக்கம் சுருங்கி *அசையடி தாழிசை விட்டிசை *வீயத் தொடுத்துச் சுரிதகம் தாக்கித் *தவிர்ந்த தரவினோ டேனவும்

யாப்புற் றமைந்தன அம்போ தரங்கம் என்றார் காக்கைபாடினியார்.

“தரவே தாழிசை தனிச்சொற் சுரிதகம் வருவன எல்லாம் தாழிசைக் கலியே”

“சேர்த்திய தரவொடு தாழிசைப் பின்னர் நீர்த்திரை போல நெறிமையிற் சுருங்கி மூவகை எண்ணும் முறைமையின் வழாஅ அளவின எல்லாம் அம்போ தரங்கம்’” என்றார் சிறுகாக்கைபாடினியார். “உரைத்த உறுப்பொடு தாழிசைப் பின்னர் நிரைத்த அடியால் நீர்த்திரை போல அசையடி பெறினவை அம்போ தரங்கம்’ என்றார் அவிநயனார்.

“தாழிசைக் கீறாய் முறைமுறை

ஒன்றினுக் கொன்று சுருங்கும் உறுப்பின

தம்போ தரங்கவொத் தாழிசைக் கலியே”

331

என்பது சூத்திரமாகக் கொண்டு, 'தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் உடைத்தாய் நிகழ்வது' என்று அதிகாரம் வருவித்து உரைத்தாலும் கருதிய பொருளைப் பயக்கும். ‘முந்திய' என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?

ஒருசார் ஆசிரியர் தரவும் சுரிதகமும் ஆறடியால் வந்து நான்கடியாய்த் தாழிசை மூன்றும் வந்து, தாழிசைப் பின்னர்த் தனிச்சொல் முன், இரண்டடியால் ஓர் ரண்டடியால் ஓர் அராகம் வந்து, அதன் பின் இரண்டடியால் இரண்டு பேரெண் வந்து, ஓரடி யால் நான்கு கு இடை இடையெண் வந்து, சிற்றெண் இரு ரு சீரால் எட்டாய், அவை இரண்டு கூடி ஓரடியே போன்று இம்முறை அம்போதரங்க உறுப்புப் பெற்று முடிவது தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்றும்,

தரவும் சுரிதகமும் ஐந்தடியான் வந்து, தாழிசை மூன்றும் மூன்றடியால் வந்து, தாழிசைப் பின்னர்த் தனிச்சொல் முன் (பா. வே) *அசையடித் தாகி. *விரியத் *தழுவும்.