பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

து வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கு ஓதப்பட்ட உறுப்புப் பிழையாது வந்தவாறு: தரவும் தாழிசையும் தலையளவு பெற்றுத் தாழிசைப் பின்னர் அராகம் பெறாது தனிச்சொல் பெற்று அம்போ தரங்கத்திற்கோதிய அராகவடி பெறாதாய் வண்ணகத்துக் கோதப்பட்ட அராகம் நான்கும் எட்டும் என்னும்படி எட்டடியால் அராகமவை நாற்சீர் முதலாகப் பதின்மூன்று சீர் இறுதியாக அராக அடி வருக என்னும் ஓத்தினால் வந்து, அராகத்து இறுதிக்கண் வெண்பாவாய்ப் பேரெண் இரண்டடியால் இரண்டு வந்து, அவை அந்தாதித் தொடையால் வந்து இடையெண் வாராதாய், சிற்றெண் தலையளவிற்கு ஓதிய அரையடி எண் எட்டும் வந்து, தனிச் சொற்பெற்றுக் கடைக்கண் அடக்கியலுள் வண்ணித்து வந்து சுரிதகத்தால் இற்றது.

மற்றையன இவ்வாறு செயிற்றியத்துள்ளும் அகத்தியத் துள்ளும் ஓதிய இலக்கணம் தழுவிக் கிடந்தன இல்லை என்பது. இவ்வாறு சொன்னார் நீர் மலிந்த வார் சடையோன் பேர் மகிழ்ந்த பேராசிரியர்.

இவ்வாறு வருவனவற்றை அளவியல் வண்ணக ஒத்தாழி சைக் கலிப்பா என்றும், அல்லனவற்றை அளவழி வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என்றும் வழங்குவாரும் உளர் எனக் கொள்க.

“குறில்வயின் நிரையசை கூட்டிய வாரா தடியவட் பெறினே வண்ணக மாகும்'

என்றார் அவிநயனார் எனக் கொள்க.

(ங க)

கலி வெண்பா

அரு. தன்றளை ஓசை தழீஇநின் றீற்றடி

வெண்பா இயலது கலிவெண் பாவே.

இஃது என் நுதலிற்றோ?' எனின், நிறுத்த முறையானே கலிவெண்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ.ள்) கலித்தளை தட்டுக் கலியோசை தழுவிக் கடை அடி வெண்பா இறுமாறே போல முச்சீர் அடியால் இறுவது யாது? அது கலிவெண்பா என்று வழங்கப்படும் என்றவாறு.

'தன்றளை ஓசை தழீஇயும்' என்னும் உம்மை விதப் பினால், ஈற்றடி கலியோசை கொண்டு, வேற்றுத்தளை தட்டு, முச்சீரால் இறுவனவும் ‘வெண்கலிப்பா' என்று வழங்கப்படும் எனக் கொள்க.