பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

மணிநின்ற மேனியான் மதநகையைப் பெறுகுவார் அணிநின்ற விடைகொண்டார் எனச்சொல்லி அறைந்தனரே'

இது தரவு.

D

66

"தானவ்வழி,

து தனிச்சொல்,

“எழுப்பற்றிச் சனந்துறுமி எவ்வழியும் இயமியம்ப 'விழுக்குற்று நின்றாரும் பலர்;

இது தாழிசை,

89

66

ஆங்கே,

து தனிச்சொல்,

“வாளுற்ற கண்ணாளை மகிழ்விப்போம் எனக்கருதிக் கோளுற்று நின்றாரும் பலர்;

இது தாழிசை.

66

ஆண்டே,

இது தனிச்சொல்.

"இத்திறத்தாற் குறையென்னை இருங்கிளைக்கும் கேடென்னப் பற்றாது நின்றாரும் பலர்

இது தாழிசை.

66

‘அதுகண்டு,

இது தனிச்சொல்.

66

மைவரை *நிறத்துத்தன் மாலை இயல்தாழக் கைவரை நில்லாது கடிதேற் றெருத்தொடிப்ப அழுங்கினர் ஆயம் அமர்ந்தது சுற்றம்

எழுந்தது பல்சனம் ஏறுதொழு விட்டன கோல வரிவளை தானும்

4காலன் போலும் கடிமகிழ் வோர்க்கே!”

இது சுரிதகம்.

359

இஃது இடையிடை தனிச்சொல் வந்து, ஈற்றடி குறைந்து வந்த மூன்று தாழிசை பெற்று வந்தமையால், குறைச்சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, சிறப்பில் வெண்டளையால் வந்து, நாலடித் தரவாகி, இரண்டடித் தாழிசையாலும் ஆறடிச் சுரிதகத்தாலும் வந்தது எனக் கொள்க. பிற தளையாலும் வந்தவழிக் கண்டு கொள்க.

1.

ஒருவகைக் கருவி. 2. மக்கள் கூடி. 3. (கொல்லேறுதழுவ) வீழ்ந்து. 4. பெருமகிழ்வொடு ஏறு தழுவ வந்த பொதுவர்க்கு வளைக்கையள் காலன்போலும்.

(பா. வே) *நிறத்தனன்.