பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

மணிநிற மருளும் நின்குடை;

குடையது குளிர்நிழல் அடைகுன உயிர்களை அளிக்கும் நின்கோல்; கோலது செம்மையிற் 'குரைகடல் வளாகம் மாலையும் காலையும் மகிழ்தூங் கின்று.

இவை அராகம்.

66

66

(பேரெண்)

“ஆருயிர்க் கெல்லாம் அமிழ்தின் றமையா நீரினும் இனிதுநின் அருள்;

அருளும் அலைகடலும் ஆயிரண்டும் ஒக்கும் இருள்கொடிமேற் கொண்டாய் நினக்கு.

வை பேரெண்.

(சிற்றெண்)

“நீரகலம் காத்தோய்நீ ; நிலவுலகம் ஈந்தோய் நீ;

போரமர்க் கடந்தோய்நீ ; புனையெரிமுன் வேட்டோய் நீ; ஒற்றைவெண் குடையோய்நீ ; கொற்றச்செங் கோலோய் நீ; போகையந் துறைவனீ; பரியவர் இறைவனீ"

இவை சிற்றெண்.

"எனவாங்கு,

இது தனிச்சொல்.

“பொருகடல் வளாகம் ஒருகுடை நிழற்றி இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து

மனமகிழ்ந் தருள்புரி பெரும்புகழ் அச்சுத இனைய ஆதலின் பனிமதி தவழும் நந்தி மாமலைச் சிலம்ப

நந்திநிற் பரவுதல் நாவலர்க் கரிதே!”

து சுரிதகம்.

இது வண்ணக ஒரு போகு.

பிறவும் வண்ணக உறுப்புப் பெற்று வந்த வண்ணக ஒரு போகு, வந்தவழிக் கண்டு கொள்க. என்னை?

66

"தரவின் றாகித் தாழிசை பெற்றும்,

தாழிசை இன்றித் தரவுடைத் தாகியும்,

எண்ணிடை யிட்டுச் சின்னம் குன்றியும்,

1.

உலகம்.

2.

மேலே வந்த கலிப்பாவிலும் ‘பாகைக் கோவை' என்றது காண்க. இரண்டு யைப்பற்றிய பாடல்களே. 'பாகை' ஒரு துறைமுகப் பெயர்போலும்.

நந்தி’