பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

வலியரென வழிமொழியலன்; மெலியரென *மேற்செல்லலன் ; பிறரைத்தான் இரப்பறியலன்; இரப்போர்க்கு மறுப்பறியலன்; வேந்துடை அவையகத் தோங்குபுகழ் தோற்றினன்; வருபடை எதிர் தாங்கினன்; *பொருபடை புறங்கண்டனன்; கடும்பரிய மாக்கடவினன்;

நெடுந்தெருவில் தேர்வழங்கினன்;

ஓங்கியல களிறூர்ந்தனன் ;

  • தீந்தேறற் றசும்பு தொலைச்சினன்;

பாணுவப்பப் பசிதீர்த்தனன்;

மயக்குடைய மொழிவிடுத்தனன்;

ஆங்குச்

செய்வகை எல்லாம் செய்தனன் ஆகலின்,

இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ

படுவழிப் படுகவிப் *புகழ்வெய்யோன் றலையே”

து பிரிந்திசைத் தூங்கல் குறளடி வஞ்சிப்பா.

(சிந்தடி வஞ்சிப்பா)

"கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன

வடிவாலெயிற் றழலுளையன வள்ளுகிரன பணையெருத்தின் இணையரிமான் அணையேறித்

துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி எயினாடுவண் இனிதிருந் தெல்லோர்க்கும் பயில்படுவினை பத்தியலாற் செப்பியோன் புணையெனத்

திருவுறு திருந்தடி திசைதொழ

வெருவுறும் நாற்கதி ; வீடுநனி எளிதே !

-

381

புறநானூறு 239.

திருப்பாமாலை.

- யா. வி. 95. மேற்

து ஏந்திசைத் தூங்கற் சிந்தடி வஞ்சிப்பா. “தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோண்மேல் பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி

யா. கா. 34. மேற்.

(பா. வே) *மீக்கூறலன் *பெயர்படை. தீஞ்செறி. செய்ப. *இகல்வெய்யோன்.