பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

'வருகுவ தாயிற் சென்று சென்று

தொன்றுபு துதைந்த புன்னைத் தாதுகு

தண்போதின் மெல்லக வனமுலை நெருங்கப் புல்லின் எவனோ மெல்லியல் நீயும் நல்காது விடுகுவை யாயின் அல்கலும் படர்மலி உள்ளமொடு மடன்மா ஏறி உறுதுயர் உலகுடன் அறியநம்

433

சிறுகுடிப் பாக்கத்துப் பெரும்பழி தருமே - இலக். விளக். 757. மேற். எனக் கொள்க.

ஒழுகு வண்ணம் என்பது, ஓசையின் ஒழுகிக் கிடப்பது.

என்னை?

66

‘ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும்”

என்றாராகலின்.

வரலாறு:

66

(நேரிசை ஆசிரியப்பா)

“அம்ம வாழி தோழி ! *காதலர்

  • இனமீன் பனிக்கும் இன்னா வாடையொடு

புன்கண் மாலை *அன்பின் நலிய

உய்யலள் இவளென உணரச் சொல்லிச் செல்லுநர்ப் பெறினே சேய அல்ல இன்னளி இறந்த மன்னவர்

பொன்னணி நெடுந்தேர் பூண்ட மாவே"

எனக் கொள்க.

- தொல். செய். 224.

- இலக். விளக். 757. மேற்.

ஒரூஉ வண்ணம் என்பது, ஒன்றாத தொடை யாற் கிடப்பது. ‘அஃதி யாதோ?” எனின், செந்தொடை. என்னை?

66

  • ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்"

என்றாராகலின்.

வரலாறு:

1.

(நேரிசை ஆசிரியப்பா)

“தொடிநெகிழ்ந் தனவே கண்பசந் தனவே யான்சென் றுரைப்பின் *மானமின் றெவனோ சொல்லாய் வாழி தோழி ! வரைய

முள்ளில் பொதுளிய அலங்குகுரல் நெடுவெதிர்

"வருகுவ தாயின் ஒன்றுபு துதைந்த

புன்னைத் தாதுகு தண்பொழி லகத்து

- தொல். செய். 225.

மெல்ல மேவர மென்முலை ஞெமுங்கப்” என்பது இலக். விளக். பாடம்.

(பா. வே) *காலலர்க். *கின்னே. *அன்பின்று. *மாண்பின்.