பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு:

யாப்பருங்கலம்

(குறளடி வஞ்சிப்பா)

“தென்குமரி வடவிமய

மாஅவெல்லைத் தம்புகழ்விளங்கக்

கடலன்ன படைநாப்பண்

மலையன்ன களிற்றெருத்தின்

ஞாயிற்றன்ன சேண்விளங்குதிறலர் திங்களன்ன வெண்குடையுயரிய ஒன்னாதார் மிடல்சாயத் துன்னரிய அகழ்கடந்தவர் பொன்னுடைய எயில்முருக்கி ஓவத் தன்ன வினைபுனை நல்லிற் கோவத் தன்ன கனையெரி கவரச் சென்றவர் திறல் மழுங்கவாற்றலிற் புலவர்பல புகழ்கொண்டு பெறலரிய விழுத்தாயம்

விறலியர்க்கு மகிழ்ந்துவீசினை

ஒன்னார் துப்பிற் றென்னவர் மருக !

பல்கிளைப் பசிநோனாது

கல்பிறங்கிய சுரம்நீந்தி

இவண்வந்த நசைவாழ்நன்

எனவைத்ததெல்லாம் பிறர்க்காகும்

ஈந்ததெல்லாம் எனக்காகும்

பொருள்கொடுத்தும் புகழ்கொள்வனென

இவற்கீயேன் எனக்கீவனென

என்னோக்காது நின்னோக்கி

என்னைவிடுமதி வென்வேல்வழுதி!

வெயிற்கதிர் நுழையா வியன்பெருங் காவிற்

றண்புனல் வையை ஒண்டுறைத் தொகுத்த

  • கோடுறு மணலினும் ஏத்திப்

பாடுதும் பெரும ! நின் னாடொறும் புகழ்ந்தே

எனக் கொள்க.

435

ஏந்தல் வண்ணம் என்பது, சொல்லிய சொல்லிற் சிறந்து வருவது. என்னை?

66

'ஏந்தல் வண்ணம்

சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும்”

என்றாராகலின்.

(பா. வே) *கோடுயர்.

தொல். செய். 229.