பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

(அறுசீர் ஆசிரிய விருத்தம்)

'கடியான் வெயிலெறிப்பக் கல்லளையுள் வெதும்பிய கலங்கற் சின்னீர் அடியால் உலகளந்த ஆழியான் ஆக்கிய அமிழ்தென் றெண்ணிக்

கொடியான் கொடுப்பக் குடங்கையாற் கொண்டிருந்து குடிக்கல் தேற்றான் வடியேர் தடங்கண்ணி வஞ்சிக்கொம் பீன்றாளிவ் வருவா ளாமே எனவும்,

“அடைமின்சென் றடைமின்சென் றவனாக்கிய சினகரத் திறைவன் றாளை

445

எனவும் அறுசீரடியால் வருவன எல்லாம் குறில் வல்லிசை அடுக்கிசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க.

“பிடியுடை நடையடு நடையினள் தெரியின் கடிபடும் இலமலர் அடிநனி தனதாம்

துடியிடை அடுமிவள் நடுவொடி வதுபோல் வடுவடி அடுமிவள் நெடுமலர் புரைகண்

6 எனவும்,

66

99

“கடுமுடையை நாறுகரு மேனியின ளாகிப் படுமுடையுள் 'மாகுலவர் பாத்துணலும் ஈயார் இடமுடைய நாடுநனி ஏகெனலும் போகித் தடமுடைய கன்முழையி னாடமிய ளாகி’

எனவும் இன்னவை எல்லாம் குறில் மெல்லிசை அடுக்கிசை வண்ணம். இவற்றையும் ஐந்தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க. “சூரலும் பிரம்பும் சுற்றிய”

எனவும்,

66

(கலி விருத்தம்)

“முன்றில் நின்ற முடமுதிர் பெண்ணைமேல் அன்றில் காள் ! நுமை ஆற்ற வினவுதும்; தொன்று காலம் தொடர்ந்துடன் ஆடினான் சென்று ழிச்செலும் செந்நெறி யாதென

எனவும்,

66

குரவ ணங்கிலை மாவொடு சூழ்கரைச்

சரவ ணம்மிது தானனி போலுமால் அரவ ணங்குவில் ஆண்டகை சான்றவன் பிரிவு ணர்ந்துடன் வாரலன் என்செய்கோ!”

யா. வி. 15. மேற்

எனவும் இன்னவை எல்லாம் குறில் அகவல் பிரிந்திசை வண்ணம் இவற்றையும் ஐந்தெழுத்தின்மேலும் ஒட்டிக்கொள்க.

1. வேடர்.