பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

தகைமொய்ம்பிற் றாழ்தடக்கைத் தண்ணருவி நாடன் பகைமுனை போன்றேமும் யாம்

451

இதனுள், ‘தகைமொய்ம்பிற் றாழ்தடக்கை" என்புழி வஞ்சி தூங்கிசைத்தமையால், வெறுத்து இசைப்பு.

“சிறுநன்றி இன்றிவர்க்கியாம் செய்தக்கால் நாளைப் பெறுநன்றி *பின்னும் பெரிதென் - றுறுநன்றி

தானவாய்ச் செய்வதூஉம் தானமன் றென்பவே வானவாம் உள்ளத் தவர்”

யா. வி. 4. மேற்.

சைத்தமையால்,

இதனுள், 'சிறுநன்றி இன்றிவர்க்கியாம்' என்புழிக் குற்றியலிகரம்

வந்து, வெட்டென்று இன்னாங்காய்

வெறுத்து இசைப்பு ஆயிற்று.

66

“கற்றற் றற்ற சுடற்ற கடற்றிரை

விற்றற் றற்ற வில்லேர் புருவத்தள் சொற்றற் றற்ற சுடர்க்குழை மாதரோ டுற்றற் றற்றதென் நெஞ்சு’

இதுவும் வெறுத்து இசைப்பு.

66

‘கானக நாடன் கருங்கோன் பெருமலைமேல் ஆனை கிடந்தாற்போல் ஆய பெருங்கற்கள் தாமே கிடந்தன கொல்லோ ! அவையேற்றிப் பெற்றிப் பிறக்கிவைத்தார் உளர்கொல்லோ!”

இது, முன் செய்யுளாய் வந்து, இறுதி பரவிக் கட்டுரையால் வந்தமையால் அகன்று இசைப்பு என்னும் குற்றம் ஆயிற்று. இதுவும் யாப்புக் குற்றத்துள்ளே பட்டு அடங்கும்.

இன்னும் வழு என்பதனாலே, ஆனந்தம் முதலாகிய குற்றங்களும் அறிந்து கொள்க. பிறவும் அன்ன.

L

“திண்ணிதின் நடாத்தல் தெள்ளியோர் கடனே”

என்பதனால், அவற்றை எல்லாம் பிழையாமே நடாத்துதல் புலவர்கள் கடன் என்றவாறு.

இச்சூத்திரத்துள் ‘பிறவும்' என்று சொல்லிய அதனானே, நூலும், சூத்திரமும், ஒத்தும், படலமும், பிண்டமும் ஆமாறும், அடியின்றி நடப்பனவும், ஓரடியாய் நடப்பனவும், புனைந் துரையாய் நடப்பனவும், ஆமாறும் உணர்ந்து கொள்க.

நூலாவது, மூவகைத்தாய், மூவரின் நடைபெற்று, நால் வகைப் பயத்ததாய், எழுவகை ஆசிரியர் மதவிகற்பத்தாயப், (பா. வே) * மன்னும்.