பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

475

பாம்புசெல்சுரம், பாம்புபடுசுரம், பாம்புபோகுசுரம், பாம்புவழங்குசுரம்; களிறுசெல்சுரம், களிறுபடுசுரம், களிறுபோகுசுரம், களிறுவழங்குசுரம்; என இவை நேர் ஈறாக வந்த பதினாறும்,

“மாசெல்சுரம், மாபடுசுரம், மாபோகுசுரம், மாவழங்குசுரம்; புலிசெல்சுரம், புலிபடுசுரம், புலிபோகுசுரம், புலிவழங்குசுரம்; பாம்புசெல்சுரம், பாம்புபடுசுரம், பாம்புபோகுசுரம், பாம்புவழங்குசுரம்; களிறுசெல்சுரம், களிறுபடுசுரம், களிறுபோகுசுரம், களிறுவழங்குசுரம்; என இவை நிரையீறாகிய பதினாறும்,

மாசெல்காடு, மாபடுகாடு, மாபோகுகாடு, மாவழங்குகாடு; புலிசெல்காடு, புலிபடுகாடு, புலிபோகுகாடு, புலிவழங்குகாடு; பாம்புசெல்காடு, பாம்புபடுகாடு, பாம்புபோகுகாடு, பாம்புவழங்குகாடு; களிறுசெல்காடு, களிறுபடுகாடு, களிறுபோகுகாடு, களிறுவழங்குகாடு. என இவை நேர்பு ஈறாகிய பதினாறும்,

மாசெல்கடறு, மாபடுகடறு, மாபோகுகடறு, மாவழங்குகடறு; புலிசெல்கடறு, புலிபடுகடறு, புலிபோகுகடறு, புலிவழங்குகடறு பாம்புசெல்கடறு, பாம்புபடுகடறு, பாம்புபோகுகடறு, பாம்புவழங்குகடறு; களிறுசெல்கடறு, களிறுபடுகறு, களிறுபோகுகடறு, களிறுவழங்குகடறு. என இவை நிரைபு ஈறாகிய பதினாறும், எனக் கொள்க. இவற்றுள்,

மாசெல்வாய், மாபடுவாய், புலிசெல்வாய், புலிபடு வாய் என நான்கும் வெண்பா உரிச்சீர் ; ஒழிந்த அறுபதும் வஞ்சி உரிச்சீர்.

(கட்டளைக் கலித்துறை)

“நேர்நிரை நேர்பு நிரைபுமுப் பாலும் நிரைத்துறழ்ந்தாற் சீர்நிலை முப்பத் திரண்டின் இரட்டியச் சீரிலுள்ளார்

நேர்நிரை யாதி இடைகடை நேர்வந்த நான்கும் வெள்ளைக் காரியர் ஓதினர் அல்லன வஞ்சிக் கறுபதுமே

இதனை விரித்து உரைத்துக் கொள்க.

766

இயற்சீர் முதலாகியவற்றிற்கு இலக்கியம் வருமாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

குருகுவேண் டாளி கோடுபுய்த் துண்டென 2மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது

1. நிரைபுநேர், நேர்நேர், நேர்புநேர், நேர்நிரை. 2. நேர்நிரைபு, நிரைநேர்பு, நிரைநிரைபு, நேர்நேர்பு.