பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(கலி நிலைத்துறை)

“கோடற் கொல்லைக் கோல அரங்கிற் குவவுத்தேன் பாடக் கொன்றைப் பைம்பொழில் நீழற் பருவஞ்சேர் வாடைப் பாங்காய் மத்த மயூரக் கிழவோன்வந்

தாடக் கொண்மூ ஆர்த்தன அம்பொற் கொடியன்னாய்!”

எனவும் இவை பதின்மூன்றெழுத்தடி அளவியற்சந்தம்.

6

66

“குரவக் கோலக் கோங்கணி சோலைக் குயிலாலப்

பரவைத் தேன்காள்! பாடுமி னீரும் பகைவெல்வான் புரவித் தேர்மேற் போனவ ரானா தினிவந்தால் விரவிக் கோநின் வெங்கணை வேனிற் பொருவேளே" இது பதினான்கெழுத்தடி அளவியற்சந்தம். (தரவு கொச்சகம்)

“யதிகணம் இருநிலம் இறைவனோ டிமையோர் துதிதிகழ் மொழியிசை துதைமதில் உடையேம் அதிபதி அடியிணை அடைகுவம் எழுநாம் மதிபுரை திருமுக மடநடை மயிலே

து பதினைந்தெழுத்தடி, அளவியற்சந்தம்.

(கட்டளைக் கலித்துறை)

“மாவரு கானல் வரையதர்ப் பாங்கர் மலிகுரவின் பூமலி சோலைத் திருவரூங் காண்பர் புதுமதுநீர்த் தாமரை வாவித் தடமலர் சாடிக் கயலுகளக் காமரு நீலம் கனையிருள் காலும் கழனிகளே' இது பதினாறெழுத்தடி அளவியற்சந்தம்.

(எழுசீர் விருத்தம்)

505

“கோலக் கொன்றைக் கொழுநன் எழிலார் கொம்பன தோளை நாளும் சாலப் புல்லித் தளவ மடவாள் தானகத் தோகை எல்லாம்

ஆலக் கொண்மூ அதிரும் இதுகாண் ஆய்மலர்க் கோதை நல்லாய் காலச் செவ்வேற் கனகக் கடகக் காதலர் சொன்ன ஆறே’

எனவும்,

(கட்டளைக் கலித்துறை)

"செருவிளை வைவேல் திகழொளி வேந்தர் திருமுடிமேல் உருவிளை ஒண்போ துறுநின பாதங் குறைவறியாக்

(பா. வே) *ஆடிக்.

99