பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

'நாற்பா நடைதெரிந்த நன்னூற் பெரும்புலவர்

நூற்பால் நயந்த நுழைபொருளைப் - பாச்சார்த்திப் பாவித்துப் பார்மேல் நடாத்தப் படருமே

நாவித் தகத்து 'நகம்

எனவும்,

(கலி விருத்தம்)

"புலந்துறை போகிய நலவர் நாவினுட்

கலந்துறை கலைமகள் கவிதை கந்தமா நிலந்தொழப் புறப்படும் நிலையள் ஆகுமிவ் விலங்கிழை பெருமையை எண்ண வேண்டுமோ!"

எனவும்,

(கட்டளைக் கலித்துறை)

2“உள்ளப் பரவையி னூல்வரை நாட்டியொண் கேள்விதம்பா எள்ளப் படாமை இயையக் கடையின் இசைபெருக்கும் வள்ளற் குணநாவர் வானோர் களைவள மைப்படுக்கும் வெள்ளைக் கவிதை அமிழ்தமெல் லார்க்கும் வெளிப்படுமே” ‘அகமுத லாய பொருள்கவிக் காவி அணிதழைப்பத் தகமுத லோர்சொற்ற பாவின சட்டகக் கட்டுரையே நிகழ்தரும் ஓசை இயனடை யானெடு நீர்வரைப்பிற் புகழ்தரு வாய்மைப் பயன்வியன் சீர்த்திப்புத் தேளுலகே எனவும் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

517

அறம் பொருள் இன்பம் வீடுபெறு ஆமாறு சொன்ன நூல்களுள்ளும், அவை சார்பாக வந்த சோதிடமும், சொகினமும், வக்கினகிரந்தமும், மந்திரவாதமும், மருத்துவநூலும், சாமுத்திரியமும், நிலத்துநூலும், ஆயுதநூலும், பத்து விச்சையும், ஆடைநூலும், அணிகலநூலும், அருங்கல நூலும் முதலாயவற்றுள்ள மறைப்பொருள் உபதேசமும், வல்லாராயும், கவிப் பெருமையும், சாவவும் கெடவும் பாடு மாறும் மனத்தது பாடுமாறும், பாடப்படுவோர்க்கும் வரும் நன்மையும், தீமையும் அறியுமாறும் வல்லார்வாய்க் கேட்டு உணர்ந்துகொள்க, ஈண்டு உரைப்பிற் பெருகும்.

இனிப் பாவினங்களுட் சமக்கிரதமும்

வேற்றுப்

பாடையும் விரவி வந்தால், அவற்றையும் அலகிட்டுப் 1. மணம். 2. கவிதையை அமிழ்தென உருவகித்தது. உள்ளம், கடல்; நூல், மலை ; கேள்வி, தூண் (அடை).