பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

525

6

எனவும் இவை ஈற்றடியல்லா ஏனையடியெல்லாம் எழுத்து ஒத்து வந்தமையாற் கட்டளை வெண்பா.

மந்தரமும் மாகடலும் மண்ணுலகும் விண்ணுலகும் அந்தரமும் எல்லாம் அளப்பரிதே - இந்திரர்கள் பொன்சகள ஆசனமாப் போர்த்து மணிகுயின்ற இன்சகள ஆசனத்தான் ஈடு”

எனவும்,

(16)

(15)

(14)

– யா. வி. 57. மேற்.

"தானோரும் எம்முள்ளி வாராது தானண்ணி வானோரை வாட உரப்புங்கொல் - வானோர் முடிக்கோடி தேய்த்தான் மூவமிழ்தம் தந்தான் அடிக்கோடி மீளாத அன்பு?

(11)

(11)

(12)

6 எனவும் இவை எல்லா அடியும் எழுத்து ஒவ்வாது வந்தமை யால், கலம்பக வெண்பா.

(சமநடை வெண்பா)

“சென்று புரிந்து திரிந்து செருவென்றான் மின்றிகழும் வெண்குடைக்கீழ் வேந்து'

(9)

(9)

இஃது ஈற்றடியும் ஏனை அடியும் எழுத்து ஒத்து வந்தமை யால், சமநடை வெண்பா.

சமவியல் வெண்பா வந்தவழிக் கண்டு கொள்க.

(மயூரவியல் வெண்பா)

"குருந்து குளிர்ந்து மயங்கு குவட்டு

மருந்து கொணர்ந்து மகிழ்ந்து நமது

பெரும்பிணியை நீக்குவதாம் பீடு

இஃது ஈற்றடி மிக்கு, ஏனை அடி

குறைந்து,

ஒவ்வாது வந்தமையால், 'மயூரவியல் வெண்பா.

(8)

(8)

(10)

தம்முள்

இனி, பதின்மூன்று எழுத்தடி முதலாகிய 2இலக்கணக்கலி

எட்டும் வருமாறு:

366

(இலக்கணக் கலிப்பா)

அன்றுதான் குடையாக வின்றுநளி நீர்சோரக்

குன்றெடுத்து மழைகாத்த கோலப்பூண் மார்பினோய் !”

து பதின்மூன்று எழுத்தடிக் கலிப்பா.

1. மயூரம்- மயில். உடல் நீளத்தினும் தோகை நீளம் மிக்கிருக்கும் மயில் போன்ற அமைப்புடையதெனக் காரணக்குறி. 2. பதின்மூன்றெழுத்து முதலாக இருபதெழுத் தின்காறும் உயர்ந்த எட்டு நிலத்தானும் இலக்கணக் கலிப்பா வரப்பெறும். 3. எழுத்தெண்ணுதற்கு இவ்வெடுத்துக் காட்டுக்களுள் முதலடி மட்டுமே கொள்க.