பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/557

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

செய்யுள்

முதலடியும் நான்காமடியும் சீர் ஒத்து ஓர் எழுத்துக் குறைந்து நடு இரண்டடியும் சீர் ஒத்து சீர் எழுத்து மிக்கதனை 'யவமத்திமம்' என்றும் 'தோரையிடைச் செய்யுள்' என்றும்; இடை இரண்டடியும் குறைந்ததனைப் ‘பிபீலிகா மத்திமம்’ என்றும் 'எறுப்பிடைச் ச் என்றும்; முதலிரண்டடியும் ஒத்துக் கடையிரண்டடியும் எழுத்து மிக்கு வருவனவற்றையும், முதலிரண்டடியும் தம்முள் ஒத்து எழுந்து மிக்குக் கடையிரண்டடியும் ஒப்ப எழுத்துக் குறைந்து வருவனவற்றையும், முதலிரண்டடியும் தம்முள் ஒப்ப எழுத்துக் குறைந்து கடையிரண்டடியும் தம்முள் ஒப்ப எழுத்துக் குறைந்து வருவனவற்றையும், ஒன்றிடை விட்டுக் குன்றி வருவனவற்றையும், ஒன்றிடை

யிட்டு மிக்கும் குறைந்தும் வருவனவற்றையும் ‘பாதிச்சமச் செய்யுள்' என்றும்;

இவ்வாறின்றிச் சீர் ஒத்து மிக்கும் குறைந்தும் வருவன வற்றை அளவழிப்பையுட் சந்தம் என்றும் வேண்டுவர்.

தாண்டகங்கட்கும் இவ்வாறே சொல்லுவர் ஒருசார் வடநூல் வழித் தமிழாசிரியர்.

அவற்றுட் சில வருமாறு:

(கலி விருத்தம்)

“பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம் செங்கயல் இனநிரை திளைக்கும் செல்வமும் மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி

அங்கயற் பிறழ்ச்சியும் *அமுத நீரவே”

(12)

(13)

(13)

(13)

சூளாமணி, 8.

து சீர் ஒத்து, ஓர் அடியுள் ஓர் எழுத்துக் குறைந்து வந்தமை

யால் நிசாத்து.

“கொல்லைக் கொன்றைக் கொழுநன் றன்னை

மல்லற் பொழில்வாய் மணியேர் முறுவல்

முல்லைக் குறமா மடவாள் முறுகப்

(9)

(11)

(11)

(11)

புல்லிக் குளிரப் பொழியாய் புயலே!

இஃது ஓரடியுள் இரண்டெழுத்துக் குறைந்து சீர் ஒத்து

வந்தமையால், விராட்டு.

என்னை?

(பா.வே) அறாத.