பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/579

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

திருநிதிப் பிறங்கலொ டிமையவர் சொரிதலின்* முருகயர் வுயிர்க்கு மும்மலர் மாரியை நால்வகை யனந்தமு நயந்தனை தேவரி னைவகை விழவு மையற வெய்தினை யாறுபுரி நிலையுந் தேறினர்க் கியம்பினை யெழுநயம் விரித்த திருமறு மார்பினை யறுபொரு ளறைந்தனை யைம்பத மருளினை நான்குநின் முகமே மூன்று நின் கண்ணே யிரண்டுநின் கவரி யொன்றுநின் னசோகே யொருதன்மையை யிருதிறத்தினை முக்குணத்தினை நால்வகையினை யைம்பதத்தினை யறுபிறவியை யேழகற்றிய மாதவத்தினை யரிமருவிய மணியணையினை வளர்கதிரொளி மண்டலத்தினை அதனால்,

மாகெழு நீழற் கேவலந் தோற்றிய வாதியங் குரிசினிற் பரவுதுந்

தீதறு சிவகதி சேர்கயா மெனவே"

எனவும்,

1.

66

(இணைக்குறள் ஆசிரியப்பா)

ஓருடம் பிருவரா யொன்றி யொன்றுபுரிந் தீரிதழ்க் கொன்றை சூடினை; மூவிலைச் சூல மேந்தினை; சுடருஞ் சென்னிமிசை யிருகோட் டொருமதி யெழில்பெற மிலைச்சினை; ஒருகணை யிருதோள் செவியுற வாங்கி மூவெயி னாற்றிசை முனையரண் செகுத்தனை;

ஆற்ற முந்நெறி பயந்தனை; தேற்றி

யிரண்டி னீக்கி யொன்றி னொன்ற விரண்டு மில்லோர்க்கு

முந்நெறி யுலகங் காட்டினை; அந்நெறி நான்கென வூழி தோற்றினை; வாள்செலு

மைந்தலை யரவரைக் கசைத்தனை; நான்முகன்

(பா. வே) *செறிதலின்.

- 'திருப்பாமாலை.

இப்பாடல் ஒன்று முதல் ஏழுமுடிய ஏறி ஏறி, இறங்கி இறங்கி ஏழில் நின்றது.