பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/586

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

வல்லாள ருள்ளாரை வைவ ரவர்வயின் வல்லாள ருள்ளார் வலி”

எனவும்,

(குறள் வெண்பா)

569

66

வயலுழுவார் வாழ்வாருள் வாழ்வா ரயலுழுவார்

வாழ்வாருள் வாழா தவர்

எனவும் இவை இடையினத்தான் வந்த பாட்டு.

- யா. வி. 2, 15 மேற்.

பாத மயக்காவது, மூவர் மூன்று ஆசிரிய அடி சொன்னால், தான் ஓரடி பாடிக் கிரியை கொளுத்துவது.

வரலாறு:

(நிலை மண்டில ஆசிரியப்பா)

“ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த

(அகநானூறு 8:1)

கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்

(முல்லைப்பாட்டு. 37)

நன்னாட் பூத்த பொன்னிணர் வேங்கை

(அகநானூறு 85, 20)

மலர்கொய லுறுவதென் மனமவள் மாட்டே'

""

இது பழவடி மூன்றனோடு தாம் ஓர் அடி பாடிப்

பாக்கனார் பாடிய பாதமயக்கு.

பாவின் புணர்ப்பாவது, நால்வர் நான்கு பாவிற் கட்டுரை சொன்னால், அவையே அடிக்கு முதலாகப் பாடிப் பொருள் முடிப்பது.

வரலாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

66

“மலைமிசை எழுந்த மலர்தலை வேங்கைப்

பொத்தகத் திருந்த நெய்த்தலைத் தீந்தேன்

கண்டகம் புக்க செங்கண் மறவன்

யாழி னின்னிசை மூழ்க

வீடுகெழு பொதியில் நாடுகிழ வோனே

இது பாவுக்கு ஒப்பப் பாடியது.

1 ஒற்றுப் பெயர்த்தல் என்பது ஒரு

மொழியைப்

பாட்டின் இறுதிக் கண் வைத்துப் பிறிதொரு பொருள் பயக்கப்பாடுவது.

1.

ஒரு சொல்லில் உள்ள ஒற்றெழுத்தினை எடுத்துவிட வேறுபொருள் தருவதும், ஒரு செய்யுளில் பொருந்தி நிற்கும் வேறு பொருளைப் பெயர்த்து எடுப்பதும் ஒற்றுப் பெயர்த்தலாம்.